மாடுகளுக்கானக் கோடை காலப் பராமரிப்பு! எளிய முறைகள்!

குளிர்காலம் நோய்களைக் கொண்டவரும் என்றால், கோடை காலத்தில் வெயிலை சமாளிப்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளும் மிகப்பெரிய சவால்தான் என்றார்.

எனவே கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே, அவற்றை பராமரிக்க மேற்கொள்ள வேண்டியவை குறித்து தெரிந்துகொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அவ்வாறு தெரிந்து கொள்ள விரும்புபவர்களின் கவனத்திற்கு சில வழி முறைகள்.

கோடைகாலத்தில் கறவை மாடுகளை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது.

பசுந்தீவனம் கலப்புத் தீவனம் கொடுக்கும் அளவை அதிகரித்து உயர், நார தீவனம் அளிக்கும் அளவைக் குறைக்க வேண்டும்.

பசுந்தீவனங்களை பகல் வேளையிலும், உலர் தீவனங்களை இரவு நேரங்களிலும் வழங்க வேண்டியது அவசியம்.

நார் தீவனங்களை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொடுப்பதன் மூலம் உடல் வெப்பம் தணியும்.

உலர் தீவனங்களான வைக்கோல், தட்டை ஆகியவற்றின் மீது உப்பு கலந்த தண்ணீர் அல்லது நாட்டு சர்க்கரை கலந்த தண்ணீர் தெளித்து பதப்படுத்தியபின் வழங்க வேண்டும் என்றார்.

கோடை காலத்தில் போதிய அளவு பசுந்தீவனங்கள் கிடைக்கவில்லையெந்றால், மர இலைகள், பீர் நொதி, மரவள்ளிக்கிழங்கு திப்பி போன்ற ஈரப்பதம் அதிகமுள்ள தீவளங்களை பயன்படுத்தலாம்.

1000 கிலோ(1 டன்) பீர் நொதி மீது ஒரு கிலோ சமையல் உப்பு, ஒரு கிலோ சோடா உப்பைக் கலந்து கொடுக்க வேண்டும்.

வெயில் காலத்தில் வியர்வை மூலம் வெளியேறும் தாது உப்புக்களின் இழப்பை சரிக்கட்ட தாது உப்புக்கலவையை 50 சதவீதம் அதிகரித்துக் கொடுக்க வேண்டும்.

நாள் ஒன்றுக்கு 15லிட்டர் அல்லது அதற்கு மேல் பால் கறக்கும் மாடுகளுக்கு, தினமும் 20-30 கிராம் தாது உப்புக்கலவை, 50 முதல் 100 கிராம் சமையல் உப்பு 30-50 கிராம் சமையல் சோடா சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

கோடைகாலத்தில் தீவனம் உட்கொள்ளும் அளவு குறையும். எனவே நாள் ஒன்றுக்கு 15 லிட்டருக்கு மேல் கறவை மாடுகளுக்கு பருத்திக்கொட்டை, வறுக்கப்பட்ட சோயா ,இதர எண்ணெய்வித்துக்களை 500 கிராம் முதல் ஒரு கிலோ வரைக் கூடுதலாகக் கொடுக்க வேண்டும்.

மாட்டுக்கொட்டகையில் நீர் தெளிப்பான், மின் விசிறி அமைத்து உடல் வெப்பத்தைக் குறைப்பதன் மூலம் தீவனம் உண்ணும் அளவை அதிகரிக்க முடியும்.

கற மாடுகளுக்கு எப்போதும் குளிர்ந்த குடிநீர் கிடைக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

கோடையில் வெப்ப அயற்சியைத் தணிக்க கலப்பு தீவனத்தில் மாடு ஒன்றுக்கு முதல் 5 முதல் 10 கிராம் வரை பேக்கரி ஈஸ்ட் கலந்து கொடுக்கலாம்.

மேலும் புண்ணாக்கு, தவிடு ஆகியவற்றை 12மணி நேரம் தண்ணிரில் ஊறவைத்துக் கொடுக்கலாம்.

தற்காலத்தில் கோடை அயற்சியைத் தணிக்கவல்ல மூலிகை மருந்துகள் அல்லது நெல்லிக்காய், துளசி, அஸ்வகந்தா போன்ற மூலிகைகளை மாடுகளுக்குக் கொடுக்கலாம்.

தவிர தினமும் 100 முதல் 200 கிராம் வரை அசோலாவைத் தீவனத்தில் கலந்து கொடுக்க வேண்டும்.

மேலும் செலினியம், குரோமியம் ஆகியவற்றை தீவனத்தில் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி அதிகரித்துக் கொடுக்கலாம் என்றார்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories