களைகளை அகற்றி வயல்களில் சுத்தமாக பராமரிப்பது மாவுப்பூச்சிகள் தாக்கப்பட்ட செடிகள் களைச் செடிகளை பிடுங்கி அழிக்க வேண்டும்.
ஆரம்ப காலத்திலிருந்தே செடிகளில் மாவுப்பூச்சிகள் எறும்புகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வேண்டும். தாக்குதல் குறைவாக இருக்கும்போது பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.
வெட்டிவேர் இயல்புகளைப் பற்றி கூறுக?
வெட்டிவேர் கோரை புல் இனத்தைச் சேர்ந்த தாவரமாகும். இவை மணற்பாங்கான இடங்களில் அதிகம் காணப்படும். ஆற்றுப்படுகைகளில் பெரும்பாலும் செழித்து வளரும்.
உயரமான தண்டையும் நீண்ட தாள்களையும் கொண்டிருக்கும். இந்த தாவரம் ஒன்றரை மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் வேர்ப்பகுதி கொத்தாக காணப்படும்.
இந்த பூக்கள் பழுப்பு கலந்த ஊதா நிறத்தில் இருக்கும். இதன் வேர் இரண்டில் இருந்து நான்கு மீட்டர் ஆழம் வரை செல்லக்கூடியது. வெட்டிவேர் விலாமிச்சை வேர் எனவும் அழைக்கப்படுகிறது.
வயலில் வேர் புழுக்களினால் வரும் சேதத்தையும் எப்படி தடுக்கலாம்?
வயலை சுற்றியுள்ள குப்பைகள் மற்றும் உரக்குழி புழுக்களின் முட்டை மற்றும் இளம் புழுக்கள் தோன்றும். எனவே வயலை சுத்தமாக வைக்கவேண்டும்.
நடவுக்கு முன்பு கோடை உழவு செய்வது போல ஆழமாக உழவு செய்து வேர் புழுக்கள் மற்றும் கூட்டுப் பொருட்களை வெளிக்கொண்டு வருவதால் பறவைகள் அவற்றை கொத்திச் செல்லும்.
விதைப்புக்கு முன்பு ஒரு ஏக்கருக்கு வேப்பம் புண்ணாக்கு 200 கிலோ வயலில் இடவேண்டும். பயிர் சுழற்சி முறையை பின்பற்ற வேண்டும் .ஒரே நிலத்தில் ஒரே பயிரை பயிரிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
அகத்தியில் மற்ற கீரை வகைகளை ஊடுபயிராக விதைக்கலாம?
ஊடுபயிராக மற்ற கீரை வகைகளையும் பயிர் செய்யலாம்.
அகத்திக்கீரையை பாத்திகளின் வரப்புகளில் கொத்தமல்லி கீரை ,தண்டுக்கீரை, பசலை கீரை, அரைக்கீரை, பாலக்கீரை மற்றும் வெந்தயக் கீரை ஆகியவற்றை ஊடுபயிராக பயிர் செய்யலாம்.
கோழிகளுக்கு ஏற்படும் வெள்ளை கழிச்சல் நோய்க்கு இயற்கை மருத்துவம் என்ன?
மோர், சீரகம் ,சின்ன வெங்காயம் ஆகிய மூன்றையும் சேர்த்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க கொடுக்கலாம்
அல்லது
.
10 கோழிக்கு பூண்டு 2 பல்லு, சின்ன வெங்காயம் 10 ,கீழாநெல்லி இலை 50 கிராம், மிளகு 10 கிராம், சீரகம் 20 கிராம் ,மஞ்சள் 5 கிராம் ஆகியவற்றை சேர்த்து அரைத்து சிறு உருண்டையாக்கி மூன்று நாட்களுக்கு கொடுக்கவும் அல்லது தீவனத்தில் கலந்து கொடுக்கவும்.