முட்டைக் கோழிகளின் இனப்பெருக்கத்திற்கு இந்த நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம்..

** ஒவ்வொரு 5 முட்டைக்கோழிகளுக்கு ஒரு முட்டையிடும் கூண்டு ஒன்றை கோழிகள் முதல் முட்டை இடுவதற்கு முன்பே வைக்க வேண்டும்.

** கோழிகள் முட்டையிடுவதற்கு மூன்று விதமான முட்டையிடும் பெட்டிகள் உள்ளன.

1. தனி முட்டையிடும் பெட்டி- இது 4-5 கோழிகளுக்கு போதுமானது

2.சமுதாய முட்டையிடும் பெட்டி -இது 50-60 கோழிகளுக்குப் போதுமானது

3. டிராப் முட்டையிடும் பெட்டி – இதில் ஒரு சமயத்தில் ஒரு கோழி மட்டுமே முட்டையிடும்.

இது இனப்பெருக்க மற்றும் கற்பதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது.

** முட்டையிடும் பெட்டியில் ஆழ்கூளத்தினை போடவேண்டும். இந்த ஆழ்கூளத்தை வாரம் ஒரு முறை மாற்றி விட வேண்டும். இவ்வாறு மாற்றுவதால் முட்டைகள் அசுத்தமடைவது தடுக்கப்படுகிறது. இரவு நேரங்களில் முட்டையிடும் பெட்டியினை மூடி விட வேண்டும். இவ்வாறு மூடுவதால் கோழிகள் முட்டையிடும் பெட்டிக்குள் இரவு நேரங்களில் உட்கார்ந்து கொள்வது தடுக்கப்படுகிறது.

** ஆழ்கூள முறை வளர்ப்பில், ஒவ்வொரு நாளும் முட்டைகளை எடுத்த பிறகு, ஆழ்கூளத்தை நன்றாகக் கிளறி விட வேண்டும். மாதம் ஒரு முறை ஆழ்கூளத்தை இரசாயனங்கள் தெளிக்க வேண்டும் அல்லது ஈரமான ஆழ்கூளத்தின் போது அமோனியா வாயு உற்பத்தியைத் தடுக்கவும் இரசாயனங்களைத் தெளிக்கலாம்.

** முட்டையிடும் காலத்தில் 16 மணி நேரம் வெளிச்சம் கோழிகளுக்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

** கோழிகளுக்கு சரி விகித தீவனம் அளிக்க வேண்டும். கோழிகளின் வயது, உற்பத்தித்திறன், தட்ப வெப்ப நிலை போன்றவற்றிற்கு ஏற்றவாறு அவற்றிற்கு தீவனமளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். முட்டையிடும் காலத்தில் சராசரியாக ஒரு கோழிக்கு 100-110 கிராம் தீவனமளிக்க வேண்டும்.

** குளிர்காலத்தில் கோழிகளின் தீவனம் எடுக்கும் அளவு அதிகரித்தும், வெயில் காலத்தில் தீவனம்எடுக்கும் அளவு குறைந்தும் காணப்படும். குளிர்கால மற்றும் வெயில் கால மேலாண்மை முறைகளை முறையாகப் பின்பற்றி கோழிகளின் முட்டை உற்பத்தி நன்றாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

** ஒவ்வொரு 6-8 வார இடைவெளியில் கோழிகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகளைக் கோழிகளின் குடற்புழுத் தாக்கத்திற்கேற்றவாறு அளிக்க வேண்டும். குறிப்பாக ஆழ்கூள முறையில் கோழிகளை வளர்க்கும் போது அவற்றிற்கு குடற்புழு நீக்கம் செய்வதை முறையாகப் பின்பற்றுவது அவசியமாகும்.

** ஆழ்கூள முறையில் கோழிகளை வளர்க்கும் போது முட்டைகளை ஒரு நாளைக்கு 5 முறையும், கூண்டு முறையில் வளர்க்கும் போது ஒரு நாளைக்கு 2 முறையும் முட்டைகளை சேகரிக்க வேண்டும்.

**முட்டையிடாத கோழிகளை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பரிசோதித்து பண்ணையிலிருந்து நீக்கி விட வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories