வான்கோழிகளுக்கு திறந்தவெளியில் தீவனம் அளிக்க ஒரு வரைமுறை இருக்கு..

வான்கோழிகளுக்கு திறந்தவெளியில் தீவனம் அளிக்கும் முறை

** வான்கோழிகளை திறந்தவெளிகளில் வளர்க்கும் போது அவை மண்புழுக்கள்,சிறிய பூச்சிகள், நத்தைகள், சமையலறைக்கழிவுகள், கரையான் போன்ற புரதம் அதிகமான பொருட்களை உண்பதால் தீவனச்செலவு 50 சதவிகிதம் வரை குறைகிறது.

** இது தவிர பயிறு வகை தீவனங்களான வேலி மசால், குதிரை மசால் மற்றும் முயல் மசால் போன்றவற்றை வான்கோழிகளுக்கு உணவாக அளிக்கலாம்.

** திறந்த வெளியில் சுற்றித்திரியும் வான்கோழிகளின் கால்களில் ஏற்படும் சுணக்கம் மற்றும் ஊனத்தைத் தவிர்க்க, வான்கோழி ஒன்றிற்கு வாரத்திற்கு 250 கிராம் அளவு சுண்ணாம்பு சத்து கொடுக்க வேண்டும்.

** காய்கறிக்கழிவுகளை கொடுப்பதன் மூலம், தீவனச்செலவினைக் பத்து சதம் வரை குறைக்க வாய்ப்புள்ளது..

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories