வேளாண் மற்றும் கால்நடைகள் பற்றி தகவல்கள்!

கோவை மாவட்டடம் சுல்தான்பேட்டை பொள்ளாச்சி ஆனைமலை கோட்டூர் பகுதிகளில் விவசாயிகள் பயிர் சாகுபடி மட்டுமின்றி துணை தொழிலாக கால்நடை வ ளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயத்தில் நஷ்டம் ஏற்படும்போது கால்நடைகள் தான் வாழ் வாதாரத்திற்கு கைகொடுப்பதாக விவியசாயிகள் கூறுகின்றனர். கோடை வெயில் காலத்தை தொடர்ந்து சுட்டெரிக்கும் கத்திரி வெயில் தொடர்கிறது. வெயில் காலத்தில் பரவலாக மழை வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மழயின் தாக்கம் குறைந்து வெயில் சுட்டேரிப்பதால் ஆடு,மாடு போன்ற கால்நடைகள் பல்வேறு நோயைகளால் தாக்கப்பட்டுள்ளன.இதனால் கால்நடைகள் சோர்வடைந்து குறைந்த அளவில் பால் தருகிறது.சில நாட்களாக பல இடங்களில் கால்நடைகள் வயிற்றுப்போக்கு வெப்ப அயர்ச்சி நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன இந்த நோய்களில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க அவற்றை நிழலில் கட்டி வைக்க வேண்டும் தினமும் காலையில் கால்களைக் கழுவி விடுவதோடு உடலில் நன்கு தண்ணீர் ஊற்றி வெப்பம் தணிக்க வேண்டும் சுத்தமான நீரை அதிக அளவில் பருக விடுவதோடு குடிநீரை அருகிலேயே வைக்க வேண்டும் அதன் பின் கால்நடை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

பசுக்களுக்கு நோய் பல்வேறு பாக்டீரியா கிருமிகள் பெருகுவதால் ஏற்படுகிறது ஆரம்பத்தில் ரத்தம் போல் வருவது இருந்து தண்ணீராக வெளியேறுதல் வீக்கம் ஏற்படுதல் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள் வலி உண்டாகும் ஆரம்பத்தில் பால் கறக்கும் மாடு அனுமதிக்காது ஆரம்பத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் மதிப்போம் திடமாகி சுரப்பு நின்றுவிடும் காம்பில் அடைப்பு ஏற்படும் உடனடி சிகிச்சை அளிப்பது நல்லது பாலையும் சோதனை செய்து ஆன்ட்டிபயாடிக் மருந்து கொடுப்பதன் மூலம் குணப்படுத்தலாம் பாதித்த பகுதிகளில் சோற்றுக்கற்றாழை 200 கிராம் மஞ்சள் 100 கிராம் சுண்ணாம்பு 5 கிராம் எடுத்து மிக்ஸியில் அரைத்து கலவையை பால் கரந்த பிறகு தினமும் 5 அல்லது 6 முறை தடவினால் வீக்கம் குறையும் பாதிப்பு ஏற்படாது இருக்க தொழுவத்தில் சுத்தமாக வைக்கவேண்டும் பால் கறக்கும் முன்பு ஒரு சதவீதம் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலில் கழுவுவதன் மூலம் மடி நோய் கட்டுப்படுத்தலாம் என திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்பு முன்னாள் இணை இயக்குனர் கூறியுள்ளார்.

.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories