ஆடு வளர்க்க விருப்பமுள்ளவர்கள் மற்றும் ஆடு வளர்ப்பவர்கள் அனைவருக்கும் இனிப்பான செய்தி. உங்களுக்காகவே வந்துள்ளது திட்டம் (Goat Bank Scheme). ஆடுகளை எளிதாக நல்ல விலையில் விற்க, வாங்க இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, அக்ரோடெக் நிறுவனம். அக்ரோடெக் (AcroTech) ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம், தமிழகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் விவசாயிகளை ஒன்றிணைத்து அவர்களின் தற்சார்பு பொருளாதாரத்தை (Self-sufficient economy) மேம்படுத்தும் வகையில் ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. அனைத்து விவசாயிகளுக்கும் தலா இரண்டு ஆடுகள் வீதம் வளர்ப்புக்கு விலையில்லாமல் வழங்கி அதனை இனப்பெருக்கம் செய்து வருமானத்தை ஈட்டித் தரும் உன்னத பணியில் ஈடுபட்டுக் கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆடு வங்கி (Goat Bank) எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஆடுவங்கித் திட்டம்:
ஆடுவங்கித் திட்டம் தமிழகத்திலேயே முதல்முறையாக விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இதனை விரிவாக்கம் செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் இத்திட்டத்தினை தொடங்க இந்நிறுவனம் முயன்று வருகிறது. இத்திட்டம் சந்தைகளுக்கு மாற்றான ஒரு உன்னதமான திட்டம் ஆகும். இதன் மூலம் பெண் விவசாயிகள் (Female farmers) நேரடியாக பயன் பெறுகிறார்கள் இவர்கள்.
ஆடு வளர்ப்பவர்கள் தாங்கள் உற்பத்தி செய்த ஆடுகளை சந்தைப்படுத்த மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை உணர்ந்த இந்நிறுவனம் சந்தைக்கு ஒரு மாற்று ஏற்பாடாக இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம், ஆடு உற்பத்தியாளர்கள் ஆடுகளை நேரடியாக இம்மாதிரியான ஆடு வங்கிகளை அணுகி சிறந்த விலைக்கு விற்று கொள்ளவும், வாங்கிக் கொள்ளவும் வழிவகை செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் இடைத்தரகர் (Intermediary) இன்றி உற்பத்தி செய்த பொருட்களுக்கு சரியான விலையில் கிடைப்பதாக ஆடு வளர்ப்பவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.
அக்ரோடெக் நிறுவனம்:
தமிழகத்திலேயே முன்மாதிரி திட்டமாக அக்ரோடெக் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் விரிவாக்கத்தில் நீங்களும் பங்கு பெறுவதற்கும், லாபம் அடைவதற்கும் ஒரு அரிய வாய்ப்பை இந்நிறுவனம் ஏற்படுத்திக் கொடுக்க உள்ளது. இதற்கு மாவட்ட வாரியாக முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இதன் மூலம், குறைந்த முதலீட்டில் ஆட்டு வர்த்தகத்தில் நீங்களும் நிலையான மாத வருமானம் சம்பாதிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றார்.
தொடர்புக்கு:
அலைபேசி : 9884299871 / 7010144851 / 9566992545.