ஆடுகளுக்கான மருத்துவக் குறிப்புகள்
ஆடுகளின் கால் காணைக்கு
குப்பைமேனி இலை, கற்பூரம், அரைத்து வேப்ப எண்ணெயில் கலந்து 3 தடவை காலில்
தடவ வேண்டும்.
ஆடுகளின் வாய் புண்ணுக்கு
சிறிதளவு தேங்காய் எண்ணெய்யை புண்ணில் தேய்த்தவிட வேண்டும்.
நாட்டு வாழைப் பழத்தை நல்லெண்ணெயுடன் பிசைந்து தர வேண்டும்.
ஆட்டிற்கு கால் ஒடிந்தால்
எருமைச் சாணத்தை கள்ளிப் பாலுடன் சேர்த்து காய்ச்சி ஒடிந்த பகுதியில் பூசி மூங்கில் குச்சி வைத்துக் கட்ட வேண்டும்.
ஆடுகளின் வயிறு ஊதலுக்கு
பிரண்டை அரைத்து 50 மி.லி. ஓமவல்லி சாறுடன் கலந்து கொடுக்க வேண்டும்.
பிரண்டை தண்டை வயிற்றை சுற்றி போட்டு பிறகு ஓமவல்லி சாறு 50 மில்லி அளவு 2 வேளை கொடுக்க வயிறு ஊத்தம் குறைந்து விடும். அதன்பின் 2 மணிநேரம் மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது புளித்த மோர் கோடுக்கக் கூடாது.
வாய்க்காணை – கால்காணைக்கு
செம்மறி ஆட்டுக்கு காணை நோய் வந்தால் புண்களின் மீது வேப்பெண்ணெய் தடவ வேண்டும்.
மலை வாழைப்பழத்துடன் காட்டுக் கம்புக் கஞ்சி தினம் 1 லிட்டர் வீதம் 3 நாட்கள் தரவேண்டும்.
செம்மறி ஆட்டின் வாய்ப்புண்ணுக்கு
எலுமிச்சம்பழத்தை எடுத்து, சாறு பிழிந்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து புண் உள்ள இடத்தின் மேல்பூச வேண்டும். இதனையே உள் மருந்தாகவும் கொடுக்கலாம். இவ்வாறு 3 நாட்கள் தொடர்ந்து ஒரு வேளை கொடுக்க வேண்டும்.