இந்தியாவில் எத்தனை கோழி இனங்கள் இருக்கு? அதன் சிறப்புகள்…

இந்தியாவில் நான்கு கோழி இனங்கள் உள்ளன. அவையாவன. அசீல், சிட்டகாங், பர்சா மற்றும் கடக்நாத்

1.. அசீல்

அசீல் இனம் அதன் உடற்கட்டு, வலிமையான உடல் திறன் மற்றும் சண்டையிடும் திறன் போன்றவற்றிற்காக புகழ் பெற்றவை.

அசீல் கோழி இனத்தின் பிரபலமான வகைகள்

பீலா (தங்க நிறமுடைய சிவப்பு), யாகப் (கருப்பு மற்றும் சிவப்பு), நியூரி (வெள்ளை), காகர் (கருப்பு), சிட்டா (கருப்பில் வெள்ளை நிறப் பொட்டுகள்), ஜாவா (கருப்பு), சப்ஜா (வெள்ளை மற்றும் தங்க நிறம் அல்லது கருப்பு கலந்த மஞ்சள் நிறம் அல்லது வெள்ளி), டீகார் (பழுப்பு), ரேசா (இளஞ்சிவப்பு), பீ கோம்ப் எனும் கொண்டை அமைப்பு, நல்ல சிவப்பு நிறமுடைய தாடி மற்றும் காது மடல்கள், நீண்ட கழுத்து, பலமான கால்கள்.

2.. சிட்டகாங்

சிட்டகாங் கோழியினம் மலாய் என்றும் அறியப்படும்.

இந்த கோழியினம் இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்க்கப்படுகிறது.

சிட்டகாங் இனத்தின் பிரபல வகைகளாவன, பஃப், வெள்ளை, கருப்பு, அடர்ந்த பழுப்பு, சாம்பல் நிறம்.

பீ கொண்டை, சிவப்பு காது மடல்கள், நீண்டு தொங்கும் கண் இமைகள், இறகுகள் அற்ற கொண்டைகள்.

3.. கடக்நாத்

கடக்நாத் கோழியினத்தின் தோல், அலகு, தாடி, கால் விரல்கள் மற்றும் பாதம், போன்றவை சாம்பல் நிறத்தில் இருக்கும்.

இக்கோழியினத்தின் கொண்டை, தாடி, நாக்கு போன்றவை இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

இந்த கோழியினத்தின் உட்புற உறுப்புகள் அடர் கருப்பு நிறத்திலும், அதன் தசைகள், தசை நார்கள், நரம்புகள், மூளை கருப்பு நிறத்தில் இருக்கும். கருப்பு நிறம் மெலனின்
நிறமி கலந்திருப்பதால் கருப்பு நிறம் இருக்கும்.

4.. பர்சா

பர்சா இனம் நடுத்தர உடல் வாகுடைய, இலகுவான எடையுடைய, எப்போதும் கவனுத்துடன் உஷாராக இருக்கும்.

இவற்றின் முட்டையிடும் திறன் குறைவு.

இவற்றின் தோல் நிறம் வேறுபடும்.

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories