இளம் கன்று மற்றும் எருதுகளுக்கு ஏற்றவாற்று கொட்டிலை அமைப்பது எப்படி?…

1.. இளங்கன்றுக் கொட்டில்கள்

** இளங்கன்றுகளுக்கு நல்ல சுத்தமான காற்று மிக அவசியம். எனவே அவற்றை மாட்டுக் கொட்டகையில் வளர்க்காமல் தனி கொட்டிலில் நல்ல வெளிச்சமும் சுகாதாரமான காற்றும் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுதல் நலம்.

** மேலும் சிறந்த பாரமரிப்பிற்கு கன்றுகளை பிறந்த இளங்கன்றுகள், காளைக் கன்றுகள் கிடாரி (பெண்) கன்றுகள் என்று வகைப்படுத்தி வேறுவேறு கொட்டிலில் வளர்த்தல் நலம்.

** கன்றுக் கொட்டில் தாய் மாடுகளின் கொட்டகை அருகே இருக்க வேண்டும்.

** ஒவ்வொரு கன்றுக் கொட்டிலின் அருகே ஒரு திறந்த புல்வெளி இருத்தல் நலம்.

** குறைந்தது 100 ச.அடியாவது 10 கன்றுகளுக்குத் தேவை. ஒரு வயதிற்குட்பட்ட கன்றுகளை 3 பிரிவாகப் பிரித்து இடங்களை ஒதுக்கலாம்.

** 20-25 ச.அடி மூன்று மாதம் வயதுள்ள கன்றுகளுக்கு, 25-30 ச..அடி 3 லிருந்து 6 மாத வயதுள்ள கன்றுகளுக்கு, 30-40 ச.அடி 6 லிருந்து 12 மாத வயதுள்ள கன்றுகளுக்கு, 40-45 ச.அடி ஒரு வருடத்திற்குமேற்பட்ட கன்றுகளுக்கு இவ்வாறு பிரித்து கன்றுகளுக்கு புல்வெளியில் இடமளிப்பதன் மூலம் கன்றுகள் சுதந்திரமாகவும், சுகாதாரமாகவும் வளரும்.

** புல்வெளியில் அங்கங்கே தண்ணீர் தொட்டிகள் அமைத்தால் சுத்தமான நீரையும் கன்றுகளுக்கு அளிக்க முடியும்.

2.. எருதுகளின் கொட்டில்கள்

** எருது கொட்டில் அமைக்கும்போது கவனிக்க வேண்டியது கையாள்வதற்கு எளிதாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்.

** கரடுமுரடான தரையில் எருதுகளின் கால்கள் நகங்கள் கீரி காயம் உண்டாவதுடன் அதன் இனவிருத்தத் திறனும் குறைந்துவிடும். எனவே கான்கிரீட் சிமென்ட் தளத்தாலான சமமாண தரை அவசியம்.

** மேலும் 15 / 10 பரிமானம் கொண்ட நல்ல காற்று மற்றும் வெளிச்சத்துடன் கூடிய அறையில் தண்ணீர் மற்றும் தீவனத் தொட்டிகள் இருக்க வேண்டும்.

** முடிந்தவரை எருதுக்கு தீவனம் வெளியில் இருந்து வழங்குமாறு கொட்டில் அமைக்கவேண்டும். சுற்றுச் சுவரானது எருது தாண்ட முடியாத அளவு 2” அளவும் உள்ளே எருது சுதந்திரமாக உலவுமாறு இருக்க வேண்டும்.

** அதேசமயம் எருது மற்ற கால்நடைகளைப் பார்க்க இயலுமாறு அமைத்தல் அதன் தனிமையைக் குறைக்க உதவும். இனவிருத்தி செய்யும் இடத்திற்க்குப் பக்கத்தில் அமைத்தல் சிறந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories