ஈக்களை விரட்டியடிக்க
இரண்டு இறக்கைகளை விரித்துக் கொண்டு, ரீங்காரத்துடன் பறந்து வந்து தொந்தரவு தரும் பூச்சியினத்தில் ஒன்று தான் ஈ. உலகளவில் 1.20 மில்லியன் ஈக்கள் உள்ளன. அவை முழுமையாக வளரும் வரையில் உருவத்தின் அளவில் மாற்றமடைந்து கொண்டே இருக்கின்றன. வீடுகளில் காணப்படும் ஈக்கள் ‘மஸ்கா டொமஸ்டிகா’ என்று அறிவியல் ரீதியாக அழைக்கப்படுகின்றன. மனிதனைக் கடிக்காமல், காலரா, வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற வியாதிகளைப் பரப்புபவையாக வீட்டு ஈக்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல், கடுமையான கண் தொற்று நோய்களை ஏற்படுத்துகின்றன.
பொதுவாக சுத்தமாக இல்லாத இடங்களில் ஈக்கள் காணப்படுகின்றன. அதாவது திறந்து வைக்கப்பட்டிருக்கும் குப்பைகள் அல்லது கழிவுகளில் தான் ஈக்கள் அதிகமாக வாழ்கின்றன. நிறைய தாவரங்கள் மற்றும் நெருக்கமான புதர்கள் உள்ள இடங்கள் ஈக்கள் உயிர் பெற்று, பல்கிப் பெருக ஏதுவாக இருக்கும் இடங்களாகும்.
ஈக்களை விரட்டியடிக்கக் கூடிய மிகச்சிறந்த பொருளாக கற்பூரம் உள்ளது. கற்பூரத்தை ஏற்றி விட்டு, தங்கியிருக்கும் இடம் முழுவதும் அதன் நறுமணத்தைக் காட்டினால், ஈக்கள் உடனடியாக இடத்தை காலி செய்து ஓடி விடும்.
பயன்படுத்தும் முறை
ஒரு சிறிய பாட்டிலில் கொஞ்சம் ரெட் வொயினை எடுத்து கொள்ளுங்கள். இதன் மணம் அப்படியே ஈக்களை தானாகவே ஈர்த்து விடும். அதிலேயே ஈக்கள் மூழ்கி விடும்.
இனி நீங்கள் எந்த வித சிரமமும் இல்லாமலே ஈக்களை எளிதாக விரட்ட இயலும். செயற்கை மருந்துகளை தெளிப்பதை விட இந்த மாதிரியான இயற்கை முறைகள் சிறந்தது.
மருத்துவ குணமிக்க துளசிக்கு, ஈக்களை உறுதியாக விரட்டியடிக்கும் திறனும் உள்ளது என்பது தெரியுமா?
ஓமத்தை வளர்த்து ஈக்களை விரட்டியடியுங்கள். ஓமம் மட்டுமல்லாமல், புதினா, லாவெண்டர் அல்லது சாமந்தி ஆகியவைகளும் ஈக்களை வெளியே தள்ளக் கூடிய திறன் கொண்டவையாகும்.
இந்த மழைக் காலத்துல ஈக்களின் தொல்லை அதிகமாக இருக்கும். இது நம்ம கால்நடைகளை அதிகமாக பாதிக்கும். இன்றைக்கு ஈக்களால் ஏற்படும் தொல்லைகள் மற்றும் அதற்கான தடுப்பு முறைகளைப் பற்றிக் கேட்கலாமா?
இந்த மழைக்காலத்தமல் எஙக பாத்தாலும் ஒரே ஈரமாக இருக்கும். இந்த காலநிலையில் ஈக்கள் அதிகமாக பெருகும். ஈக்களில் பல வகை இருக்கும். அவற்றில் கடிக்கும் ஈக்கள், குருட்டு ஈக்கள், எருமை ஈக்கள், கொம்பு ஈக்கள் ஆகிய ஈக்கள் மாடுகளின் இரத்தத்தை உறிஞ்சும். இதனால் மாடுகளுக்கு இரத்த சோகையும், புண்ணும் உண்டாகும். இதைக் கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய்யை மாடுகளின் மேல தடவலாம் மற்றும் ஈக்கொல்லிகள் உபயோகித்து ஈக்களைக் கட்டுப்படுத்தலாம். மாட்டுத் தொழுவத்தினை எப்பொழுதும்; சுத்தமாகவும், ஈரப்பதம் இல்லாமலும் பராமரிக்க வேண்டும்;. இரவில புகைப் போட்டு ஈ, கொசு வராமல் பாதுகாக்கணும். இதன் மூலமாக ஈயின் தொல்லைகளிலிருந்து மாடுகளை பாதுகாப்பாக வளர்க்கலாம்.
ஈக்களை விரட்டக் கூடிய ஈ பேப்பர்களை உங்கள் வீட்டிலேயே தயாரிக்க முடியும். சர்க்கரை மற்றும் சோள மாவு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, ஒரு மொத்தமான பிரௌன் பேப்பரில் தடவுங்கள். அந்த பேப்பரின் ஒரு மூலையில் துளையிட்டு, வீடு அல்லது அறைக்கு வெளியே தொங்க விடுங்கள். இதன் மூலம் ஈக்கள் வீட்டுக்குள் அல்லது அறைக்குள் நுழைவதை தவிர்க்க முடியும்.
பாட்டிலில் 200 மி.லி., தண்ணீரில் நெத்திலி கருவாட்டு துண்டை போட இதன் வாசனையில் மாட்டு ஈ, பழ ஈ ஆகியவை சிக்கி கொள்கின்றன