கருங்கால் கோழி

இந்தக் கோழியின் சிறப்பே கருமை நிறம் தான் .இந்த கோழிகள் அனைத்து உறுப்புகளும் கருமை நிறமாக இருக்கும். மேலும் தசைகள் நரம்புகள் ரத்தம் ஆகியவையும் கருப்பாக இருக்கும்.

அதிக வெப்பம் மற்றும் குளிர் தாங்கி வளரும் தன்மையுடையது. இந்த கோழி அடைகாத்து, இருப்பினும் ஆண்டு முழுவதும் முட்டையிடும் தன்மை உடையது.

நாட்டுக் கோழிகளை போல குறைந்த கொழுப்பு சத்து உடையது .அதிக நோய் எதிர்ப்பு திறனும் நீண்ட காலம் உயிர் வாழும் குணம் உடையது.

ஒரு கோழி இரண்டு முதல் நான்கு கிலோ வரை வளரும் தன்மை உடையது .கோழிகளின் வளரும் காலம் ஐந்து மாதங்கள் ஆகும்.மக்காச்சோளம் ,கம்பு உள்ளிட்ட தானியங்களை உணவாக பயன்படுத்தப்படுகிறது. அதிக நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் நீண்ட காலம் உயிர் வாழும் தன்மை கொண்டது.

நாட்டு கோழி முட்டையை விட அதிக எடை மற்றும் குஞ்சு பொரிக்கும் திறன் கொண்டவை. இந்த கருங்கோழிகள் பொதுவாக நோய் தாக்குதலுக்கு உள்ளாவது இல்லை. இருப்பினும் சில நேரங்களில் ராணி கட் என அழைக்கப்படும் வெள்ளைக்கழிச்சல் நோய் இவற்றை பாதிக்கும் இது போன்ற நோய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். கருங்கோழி இறைச்சி பல விதமான நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories