கால்நடைகளுக்கு ஏற்ற இனப்பெருக்க கால பராமரிப்பு ஒரு பார்வை..

இனப்பெருக்க கால பராமரிப்பு

** கறவை மாடுகளின் சினைப் பருவ அறிகுறிகள், கருவூட்டல், கருத்தரித்தல் மற்றும் கன்றுகள் பற்றிய முழு விபரம் கூர்ந்து கவனித்து தனிப்பட்ட ஏடுகளில் பதிவு செய்து வைக்க வேண்டும்.

** சரியான சினைப்பருவத்தில் கருவூட்டம் செய்திடல் வேண்டும்.

** கன்று ஈன்ற 60-80 நாட்களுக்குள் ரத்தக்கசிவு நிற்க வேண்டும்.

** கன்று ஈன்ற 2-3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கருவூட்டம் செய்யலாம்.

** சினைப்பருவ அறிகுறிகள் தெரிந்த 12லிருந்து 24 மணி நேரத்திற்குள்ளாக கருவூட்டம் செய்யப்பட வேண்டும்.

** தரமான உயர்ரக காளைகளின் உறை விந்துக்களை கருவூட்டம் செய்ய பயன்படுத்த வேண்டும்.

** கருவுற்றிருக்கும் கறவை மாட்டிற்கு அதுகன்று ஈனுவதற்கு முன், முதல் 2 மாதங்களுக்கு தனிப்பட்ட கவனம் செலுத்தி தேவையான இடவசதி, உயவு, நீர் போன்றவை வழங்கப்பட வேண்டும்.

பால் விற்பனை செய்யும் வழிமுறைகள்.

** பால் கறந்த உடனடியாக அதை விற்பனை செய்ய வேண்டும். பால் கறப்பதற்கும் அதை விறபனை செய்யவதற்கும் இடையே மிக குறைந்தபட்ச நேரமே இருக்க வேண்டும்.

** பால் கறப்பதற்காக பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் மிகவும் தூய்மையானதாக பயன்படுத்த வேண்டும்.

** பால் கறப்பதற்காக பயன்படுத்தப்படும் வாளி/கேன் / பாத்திரங்கள் நன்றாக சலவைத்தூள் கொண்டு தேய்த்து மற்றும் இறுதியாக குளோரைடு நீர்மம் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

** பாலை எடுத்துச் செல்லும்போது அதிகப்படியான குலுங்கலை தவிர்க்க வேண்டும்.

** பாலை மற்றொரு ஊருக்கு விற்பனைக்காக எடுத்துச் செல்லும் போது அதை ஒரு நாள் முழுவதும் குளிரூட்டியில் பதப்படுத்த வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories