கால்நடைகளை குணப்படுத்தும் தாவரதின் பெயர் மற்றும் அதன் மருத்துவ குணங்கள்
வில்வ மரம்
இது ஒரு குறிப்பிட்ட கால கட்டங்களில் இலை உதிரக் கூடியவையாகும். இதன் பூ வெள்ளையாகவும், முதிராத இளம் பச்சை நிறமுடையதான பழமும் மற்றும் பழம் முதிர்ச்சி அடைந்தவுடன் மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இது பொதுவாக எல்லா இடத்திலும் காணப்படும். இதனுடைய பழத்தை வேக வைத்து அதில் உள்ள சாரை வெளியே எடுக்க வேண்டும். இதில் தண்ணீர் ஊற்றி கெட்டியாக தயார் செய்து கால்நடைகளில் புண் உள்ள வீங்கிய இடத்தில் தடவி குணப்படுத்தலாம்.
வெங்காயம்
இது மேல் நோக்கி குமிழ் வடிவான வெள்ளை நிற பூக்களுடன் காணப்படும். இதை சாப்பிடவும் பயன்படுத்தலாம். இது பரவளாக சாகுபடி செய்யப்படுகிறது. பனை மரத்தின் பழத்தில் தயாரிக்கப்பட்ட காவி நிறமுள்ள 250 கிராம் சர்க்கரை பாலுடன் 250 கிராம் வெங்காயத்தை கலந்து கூழ்போல் ஆக்க வேண்டும். இந்த மருந்தை தினசரி காலையில் 10 நாட்களுக்கு தொடர்ந்து கொடுத்து வந்தால் கால்நடைகளின் ஆண்மை மற்றும் அதன் இனவிருத்தியை அதிகப்படுத்தலாம்.
இளவமரம்
இது பெரிய அதிக கிளையுடன் ஒரு குறிப்பிட்ட கால கட்டங்களில் இலை உதிரக் கூடிய மரம் ஆகும். இதன் இலைகளை சேகரித்து புளித்த வேகவைத்த சோற்றுத் தண்ணீருடன் கலந்து அரைக்க வேண்டும். இதனுடைய சாரை ஒரு வேளைக்கு 500 மில்லி வீதம் 3 தடவையும். தொடர்ந்து 3 நாளைக்கு கொடுத்து வந்தால் இன விருத்தி பிரச்சினையை தீர்த்துவிடலாம்.
எறுக்கு
இது தறுசு நிலங்களிலும், தேவையற்ற இடங்களிலும் பொதுவாக காணப்படும். ஓரு கை அளவில் இலைகளை சேகரித்து அரைக்க வேண்டும். இதை கால்நடைக்கு கொடுத்தால் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.
பெரண்டை
இது புதர் உள்ள வேலிகளில் காணப்படும். இதன் மொத்த செடியை பிடுங்;கி கூழபோல் அரைக்க வேண்டும். புதிதாக பிறந்த கன்றுக் குட்டிக்கு கொடுத்தால் நச்சுக் கொடியை எளிதாக அகற்றி விடலாம்.
கரு ஊமத்தை
தேவையற்ற இடங்களில் இது காணப்படும். இதன் விதைகளை சேகரித்து தண்ணீருடன் சேர்த்து அரைத்து கூழ் போல் ஆக்க வேண்டும். இதை கால் முட்டிடலும் உள்ள இடத்தில் தடவினால் வலி மற்றும் வீங்குதல் குறைந்து விடும்.
முள்ளு முருங்கை
இது ஒரு குறிப்பிட்டகால கட்டங்களில் இலை உதிரக் கூடிய மூலகிளையுடைய மரமாகும். இதன் பூ கருஞ்;சிவப்பாக இருக்கும். இதனுடைய இலைகளை சேகரித்து தண்ணீருடன் சேர்த்து அரைத்து கூழ்; போல் ஆக்க வேண்டும். இதை கடும் இருமல் மற்றும் மார்புச்சளி நோய் உள்ள கால்நடைகளுக்கு கொடுத்தால் மிக எளிதில் குணப்படுத்தலாம்.
அவரை
இது பொதுவாக எல்லா இடங்களிலும் காணப்படும். இதனுடைய இலைகளை கூழ்; போல் அரைக்க வேண்டும். இதை கொப்புளம் மற்றும் பரு உள்ள இடங்களில் தடவினால் சீழ்போல் வடியும்; பிறகு குணமாகிவிடும்.
தும்பை
தேவையற்ற இடங்களில் வெள்ளை பூவுடன் காணப்படும். இதன் இலைகளை கூழ்; போல் அரைக்க வேண்டும். இதை காயம் பட்ட இடத்தில் தடவி புண்ணை ஆற்றிவிடலாம்.
பீர்க்கன் காய்
இதன் பழத்தை சாப்பிடலாம். இதன் பூ மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இதனுடைய இலைகளை அரைத்து கூழ் போல் ஆக்க வேண்டும். இதை கால்நடைகளின் கழுத்துப்பகுதியில் தடவினால் பருவின் வீக்கத்தை குறைக்கலாம்
.
வெத்தலை
பத்து வெத்தலைகளுடன் 200 கிராம் கருப்பு மிளகு சேர்த்து அரைத்து கூழ் போல் ஆக்க வேண்டும். இதை கால்நடைகளுக்கு கோடுத்தால் வயிற்றுச் ஜ10Pரணம் மற்றும் வயிற்றுப்; பொறுமல் போன்றவைகளை குணபடுத்தி விடலாம்.
கண்டங்கத்திரி
இதனுடைய சாரை வேப்ப எண்ணையுடன் கலந்து. கால்நடைகளுக்கு கொடுத்தால் மிக நாள்பட்ட இருமலை போக்கி விடலாம்.
புளி
இதன் இலைகளை சேகரித்து கூழ்; போல் அரைக்க வேண்டும். இதை மெல்லிய துணியில் கட்டி வீங்கிய இடத்தில் கட்டினால் வலி குறைந்துவிடும்.
நெறுஞ்சி
இதன் விதைகளை அரைத்து கூழ்; போல் ஆக்கி புதிதாக பிறந்த கன்றுக் குட்டிகளுக்கு கொடுத்து வந்தால் நச்சுக் கொடியை மிக சுலபமாக அகற்றி விடலாம்.
இஞ்சி
பத்து கிராம் இஞ்சியுடன் மிளகு, பெங்;காயம் சூடான தண்ணீருடன் கலந்து அரைத்து கூழ் போல் ஆக்க வேண்டும். இதன் சாரை கால்நடைகளுக்கு கொடுத்து வந்தால் அடி வயிறு சார்ந்த பிரச்சினைகளை குணப்படுத்தலாம்.