கால்நடையை பற்றிய நாட்டு பழமொழிகள்
“மாடா உழைச்சு ஓடா தேய்ந்தவன்” என்பது நம் நாட்டுப் பழமொழி. மனிதனுக்கு உழைத்துச் சாவதற்காகவே பிறந்தவை மாடுகள். ஓய்வெடுக்க முடியாமல், ஓட ஓட விரட்டப்பட்டு, வண்டி இழுத்து, பட்டினியால் உடல் வற்றி, தன் முகத்தையே பார்க்கும் கன்றுக்குகூட பால் கொடுக்க முடியாமல், குடம் கணக்கில் நமக்குப் பால் கொடுக்கும்,
உழைக்க மட்டுமே பிறந்த பாவப்பட்ட, பரிதாபமான உயிரிகள் நம் மாடுகள். செயற்கை வாழ்க்கைக்குள் மனிதன் புகுந்த பிறகுதான் மாடுகள் புறக்கணிக்கப்பட்டு விட்டன.
இயற்கையோடு இயைந்து, நோய் நொடியில்லாமல் வாழ்ந்த காலத்தில் தன்னைக் காத்துக் கொள்வதைவிட, தன் இயற்கைச் செல்வங்களை, கால் நடைகளை, மரம் வளர்ப்பை, நிலத்தடி நீர் ஆதாரத்தை, சுற்றுப்புறச் சூழலை, தூய்மையான மூச்சுக் காற்றை மாசுபடாமல், குன்றாமல் குறையாமல், காத்தபடி வாழ்ந்தான் மனிதன்.
“மாட்டின் கொம்பு கூறு, மனிதனின் கொம்பு மயிறு” என்பது பழமொழி. கூர்மையாக மேல் நோக்கி வளர்ந்துள்ள கொம்புகள்தான் சூரிய ஒளியை உள்வாங்கி உடலில் வைட்டமின் ‘டி’ யை உற்பத்தி செய்து கொடுக்கும் ஆன்டென்னாக்கள். இந்த வைட்டமின் ‘டி’ தான் பாஸ்பரசை உறுஞ்சி எடுத்து, உள்வாங்கி கால்சியம் பாஸ்பேட்டாக எலுமபுகளில் படியச் செய்து எலும்புகளை உறுதிமிக்க தாக்குகின்றன.
“குளம்பு பட்ட மண்ணுக்குக் குண்டுமணி எருவும் வேண்டாம்” என்பது இன்னுமொரு பழமொழி. சூரிய ஒளியிலிருந்து உள்வாங்கப்பட்ட, இயற்கையான உயிரோட்ட சக்தி மாட்டின் குளம்பின் வழியே நிலத்துக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டு, விளைநில மண்ணிலே ஊட்டம் ஏற்றப்படுகின்றது.
அதனால்தான் உழவு வேலையின் போது எருதுகளின் லாடங்களை கழற்றி விட்டு, உழவு செய்தார்கள். ஏர் பூட்டி, உழவு செய்தது சூரிய ஒளி சக்தியை பூமிக்குள் பாய்ச்சி, வளம் கூட்டுவதற்கா கத்தான் என்பதை கருத்திற் கொள்ளத் தவறி விட்டோம்.
(கொம்பு, சாண உரம் இதன் அடிப்படையில் தான்) உழவு மாடுகள் சிறுநீர் கழிக்கும்போது 50 அடி நீளத்திற்கு குறைந்தது 8 கிலோ மண்ணுக்கு தன் சிறுநீரால் (யூரியா) உரமேற்றி புரட்டிக் கொடுத்து, இயற்கையான வளம் பெருகிறது. ஊரின் நிலம் முழுவதும் பல ஊர் மாடுகளின் குளம்புபட்டு உரமேற்ற வேண்டும்.
என்பதற்காகத்தான் பொங்கல் விழா நாளிலும் அதன் பின்னரும் மாடுவிரட்டு, மஞ்சுவிரட்டு, எல்லைப் பந்தையம், சல்லிக்கட்டு, என்று பல பேர்களில் பல ஊர் காளைகளை ஒரே ஊரில் கூட்டிவைத்து நில வளத்தைப் பெருக்குவதே விழாவாக, பொங்கல் விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்து வந்தனர் நம் முன்னோர்கள்.
“அதிர ஓடினால் முதிர விளையும்” என்ற பழமொழி இதைத்தான் சொல்லுகின்றது. பூமி அதிர மாடுகள் ஒடினால் அதில் விளையும் பயிர் மணிகள் முதிர்ச்சி பெறும். சாலி குறையும். முதிர்ந்த மணிகள் சுவை நிறைந்த விதைகளாகப் பயன்படுத்தக்கூடிய முற்றிய மணிகளாக இருக்கும் என்பது முன்னோர்கள் கண்டுபிடித்துப் பயன்படுத்திய இயற்கை விதி.
அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்’’
என்று பழமொழியாகக் கூறுகின்றனர். நிலத்தில் ஆழமாக உழுதால் பெய்யும் மழைநீர் நிலத்தில் தேங்கும், மண்ணரிப்பும், நிலத்தில் மேல் உள்ள சத்துக்களும் அடித்துச் செல்லப்படமாட்டாது என்ற உழவின் தொழில் நுட்பத்தை இப்பழமொழியில் எடுத்துரைக்கின்றனர். தற்போது வேளாண் விஞ்ஞானிகள் சரிவுக்குக் குறுக்கே உழவேண்டும் என்று கூறுவது ஆழ உழுவதையே என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
‘‘முருங்கையை ஒடிச்சு வளர்க்கணும்பிள்ளையை அடிச்சு வளர்க்கணும்’’
‘‘ஒடிச்சு வளர்க்காத முருங்கையும்அடிச்சு வளர்க்காத பிள்ளையும் உருப்படாது’’
.
ஒவ்வொரு செடியும், கொடியும் வெவ்வேறு நிலைகளில் வளரும் தன்மை கொண்டன. சில தரையிலும், சில மேலேயும் படரும் தன்மை கொண்டன. அவரை வளராதது போன்று தெரிந்தாலும், விரைவாக வளரும் தன்மை கொண்டது.
அதுபோன்று பீர்க்கங்கொடி வேகமாக வளரும் தன்மை கொண்டது. இவ்விரண்டு கொடியையும் பெண், ஆண் குழந்தைகளின் வளர்ச்சியுடன் ஒப்பிடுவர். இதனை, பயிர் நடவு செய்துவிட்டால் மட்டும் பயிர் விளைச்சலைத் தராது. அதற்குத் தேவையான உரமிடுவது அவசியமானதாகும். நமது முன்னோர்கள் இயற்கை உரத்தையே பயன்படுத்தினர்.
செயற்கை (இரசாயன) உரத்தைப் பயன்படுத்தினால் உணவுப்பொருளில் நச்சுத்தன்மை ஏற்பட்டு அதனை உண்ணும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். அதனால் பெரும்பாலும் இயற்கை சார்ந்த வேளாண்மையையே அதிகம் செய்தனர். தற்போது போல் அதிகமாக செயற்கை உரத்தைப் பயன்படுத்தவில்லை.
தொழு எரு போட்டு பயிர்களின் விளைச்சலைப் பெருக்கினர். இன்று வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் குறிப்பிடுவது போன்று இயற்கை சார்ந்த உரங்களை அதிகம் பயன்படுத்தினர்.
ஆட்டின் சாணம் அன்றைக்கே உரமாகப் பயன்படும் மாட்டுச் சாணம் மட்க வேண்டும். அப்போதுதான் அது நன்கு பயனைத் தரும். மேலும் மாட்டிலிருந்து பெறப்படும் கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் உரத்தை ‘பஞ்சகவ்வியம்’ என்பர். இத்தகைய இயற்கையான உரங்களைப் பயன்படுத்த வேண்டும்