கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு கடன் அட்டை!

ஈரோடு மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கால்நடை வளர்க்கும் பத்தாயிரம் 120 விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலம் கால்நடை பராமரிப்புக்காக கிசான் கிரெடிட் கார்டு வழங்கி கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்பெற மாவட்ட அளவிலான சிறப்பு முகாம் வருகிற பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஈரோடு மாவட்டத்தின் அனைத்து கால்நடை மருந்தகங்களில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

எனவே கிசான் கடன் அட்டை இத்திட்டத்தின் மூலம் பயன்பெற ஆர்வம் உள்ள கால்நடை வளர்ப்போர் தங்களது ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், சமீபத்தில் எடுக்கப்பட்ட இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோக்கள் மற்றும் நில ஆவணங்கள் ஆகியவற்றுடன் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட வட்டியில் கடன் தொகை வழங்கப்படும். எனவே கால்நடை வளர்ப்போர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories