அசோலா – நல்ல கால்நடை தீவனம்

அசோலா நீர் நிலைகளில் மிதவைத் தாவரமாக வளரும் பெரணி வகையினைச் சார்ந்தது. இது நெற்பயிருக்கு ஒரு சிறந்த இயற்கை உரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனைக் கால்நடை மற்றும் கோழிகளுக்கு புரதச் சத்து மிகுந்த தீவனமாக பயன்படுத்தி உற்பத்திச் செலவினைக் கணிசமாக குறைக்க முடியும் என்பதை உழவர் பெருமக்கள் சமீப காலமாக உணர்ந்து வருகின்றனர்.

அசோலாவிலுள்ள சத்துக்கள் :

அசோலாவில் 25- 30 விழுக்காடு புரதச்சத்து, 14-15 விழுக்காடு நார்ச்சத்து, சுமார் 3 விழுக்காடு கொழுப்புச் சத்து, 45- 50 விழுக்காடு மாவுச்சத்து, பல்வேறுபட்ட கால்நடை மற்றும் கோழி தீவனத்திற்கு அவசியமான தாது உப்புக்கள் (கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம்) மற்றும் பல நுண்ணூட்டச் சத்துக்களும் காணப்படுகின்றன. பொதுவாக தாவர இலைகளில் மிகுந்து காணப்படும் டானின் என்ற நச்சு அசோலாவில் மிகவும் குறைவாக காணப்படுவதால் இது ஒரு சிறந்த கால்நடை தீவனமாக திகழ்கிறது என்றார் .

அசோலா வளர்க்கும் முறை :

அசோலாவைத் தொட்டிகளிலும் மற்றும் வயல்களிலும் வளர்க்கலாம். சிமெண்ட் தொட்டிகளில் கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு வயல் மண்ணை இட்டு நிரப்பி 10 செ.மீ அளவு நீர் நிரப்பி சதுர அடிக்கு 5 கிராம் சூப்பர் பாஸ்பேட், 250 கிராம் பசுஞ்சாணம் ஆகியவைகளை இட்ட பிறகு 200 கிராம் அசோலாவை தொட்டியில் இட வேண்டும். இரு வார காலத்திற்குள் தொட்டியில் இட்ட அசோலா நன்றாக வளர்ச்சி அடைந்து இரண்டு முறை மூன்று கிலோ வரை விளைச்சல் கொடுக்கின்றது. அசோலா வளர வளர தொட்டிகளிலிருந்து தினசரி இயன்ற அளவு ஒரு பகுதி அசோலாவை எடுத்து தீவனமாக பயன்படுத்தலாம் என்றார் .

இவ்வாறு உற்பத்தி செய்த அசோலாவை பச்சைத் தாவரமாகவோ அல்லது சூரிய ஒளியில் உலர்த்தியோ கால்நடை மற்றும் கோழிகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தலாம். அசோலாவை கால்நடைகளுக்குத் தீவனமாக அளிக்கும் முறையும் அதன் பயன்களும்

கால்நடை தீவனம் :

பசுமையான அசோலாவை நாள் ஒன்றுக்கு ஆடு, மாடு மற்றும் பன்றிகளுக்கு 1 -1/2 முதல் 2 கிலோ வரை கொடுக்கலாம்.

1. பால் உற்பத்தி அதிகரிப்பதுடன் பாலின் தரமும் மேம்படுகிறது.

2. பால் உற்பத்தி 15 முதல் 20 விழுக்காடு அதிகரிக்கிறது.

3. பாலின் கொழுப்புச் சத்து 10 விழுக்காடு வரை உயருகிறது.

கொழுப்புச் சத்து அல்லாத திடப்பொருள்களின் (SNF) அளவு 3 விழுக்காடு வரை கூடுகிறது என்றார் .

தமிழ்நாட்டில் விவசாயிகள் விவசாயத்துடன் கால்நடையையும் தொன்றுத்தொட்டு வளர்த்து வருகின்றனர். அதில் ” ஏழைகளின் பசு” என்று அழைக்கப்படும் வெள்ளாடு வளர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது தமிழ்நாட்டில் 6.5 மில்லியன் வெள்ளாடுகள் உள்ளது. பல்வேறு வகையான நம் நாட்டு இன ஆடுகளும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடுகளும் தற்போதைய வெள்ளாடு வளர்ப்பில் ஈடுபட போகும் தொழில் அதிபர்களுக்கு சிறந்ததொரு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்றார் .

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories