கால்நடைகளுக்கு பொதுவாக கோடை காலத்தில் ஏற்படும் நோய்களை விட மழை மற்றும் பனி காலத்தில் அதிக நோய்கள் ஏற்படுகின்றன அப்படி ஏற்படும் ஒருவித நோய்தான் செரிமானக்கோளாறு அதை பற்றி இங்கு பார்ப்போம்.
ஆடுகள் சாப்பிடுவது இயல்புதான் ஆனால் இது மழைக்காலம் ஆயிற்றே… மழைக்காலத்தில் புதிதாக தண்ணீர் விடும் இலைகளையும் புர்களையும் ஆடுகள் உ ன்னும் போது அவற்றுக்கு செரிமான கோளாறுகள் ஏற்படும்.
அரைத்து வைத்த தானியங்களை உணவாக கொடுக்கும் போதும் எளிதில் செரிமானமாகாத காய்கறிகள் அதை சாப்பிட்டு இருக்கும் ஒரு சில நேரங்களில் வயிற்றில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும் பொழுது செரிமான கோளாறுகள் இருக்கும். செரிமானக் கோளாறால் பாதிக்கப்பட்ட ஆட்டின் வயிறு உப்புசமாக இருக்கும். உப்பு சக்தி காரணமாக மூச்சு திணறும்.
ஆடுகள் வாயில் மூச்சு விடும். ஆடுகள் உறக்கமின்றி காணப்படும். அடிக்கடி பல்லைக் கடித்துக் கொள்ளும் பாதிக்கப்பட்ட ஆடுகள் நிற்கும் பொழுது கால்களை நன்றாக ஒன்றும் நிற்காமல் மாறிமாறி கால்களை வைத்துக் கொள்ளும் தலையையும் கழுத்தையும் நோக்கி தொங்கவிட்டு வைத்துக்கொள்ளும்.
முதல் உதவியாக 50 முதல் 100 மில்லி கடலை எண்ணெய் நல்லெண்ணெய் போன்றவைகளை வாய் வழியாக மருந்தாகக் கொடுக்கலாம் .இதனால் செரிமான கோளாறு குறையும் .அவ்வாறு கொடுக்கும் போது ஆட்டிற்கு குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
மழைக்காலத்திலும் பனிக்காலத்திலும் அதிக நேரம் பச்சை புல் மேய்வதை தடுத்து காய்ந்த தீவன கடலைக்கொடி இவற்றைக் கொடுக்கலாம் தீவனத்துடன் நொதிக்க கூடிய மாவுப் பொருள்களை அதிகம் சேர்க்கக்கூடாது.