கால்நடைகளுக்கு எளிய மண்ணில்லா பசுந்தீவன முறை

மண் இல்லாமல் தயாரிக்கப்படும் பசுந்தீவன உற்பத்தி விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்போருக்கும் உதவியாக இருக்கும். இந்த முறையில் 7 முதல் 10 நாட்களில் பசுந்தீவனம் உற்பத்தி செய்ய முடியும்

குறைந்த எண்ணிக்கையிலான ஆட்கள், குறைந்த நீரில் தடையின்றி தொடர்ந்து உற்பத்தி செய்ய முடியும் . ஆண்டு முழுவதும் தரம் மாறாமல், சுவை சத்துகள் நிறைந்த கலப்படம் இல்லாத பசுந்தீவனம் கிடைக்கும். 300 சதுர அடி பரப்பளவில் 600 முதல் 1500 கிலோ பசுந்தீவனம் தயாரிக்க முடியும் .

 

விதைகளை தேர்வு செய்யும்வழி முறை

நன்கு காய்ந்த மக்காச்சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, காராமணி, கோதுமை, ஓட்ஸ் விதைகளை தேர்வு செய்ய வேண்டும். 20க்கு 15 அடி அளவுள்ள பசுமையான நிழல் வலை குடில் அமைக்க வேண்டும். இதில் இரும்பு அல்லது மரத்தாலான ‘ரேக்’ அமைத்து 24 முதல் 27 டிகிரி வெப்பநிலை இருக்குமாறு வைக்க வேண்டும். 80 முதல் 90 சதவீதம் ஈரப்பதம் இருக்கலாம் .

முளைகட்டிய விதைகளை பிளாஸ்டிக் தட்டுகளில் பரப்பில் ரேக்கில் வரிசையாக அடுக்க வேண்டும். பூவாளி கொண்டு தினமும் 5 முதல் 6 முறை நீர் தெளிக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 2 லிட்டர் தண்ணீர் போதும். 8 நாட்களில் 20 செ.மீ., வரை பசுந்தீவனம் வளர்கிறது .

வேரோடு பறித்து கால்நடைகளுக்கு கொடுக்க முடியும் . எளிதாக செரிமானம் ஆகும். ஒரு கிலோ விதைக்கு 8 கிலோ பசுந்தீவனம் கிடைக்கும். கோடை மற்றும் வறட்சி காலங்களிலும் இம்முறையில் உற்பத்தி செய்யலாம். இதில் புரதம், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் உள்ளது .

–சந்திரசேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை
9443570289

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories