அகத்தி ,சுபாபுல் (சவுண்டல்) கிளரிசிடியா ,கருவேல், வெல் வெல் ,ஆச்சா மற்றும் வேம்பு போன்றவைகளை தீவனங்கள் ஆகும். இலைகள் புரதம் மற்றும் தாது உப்புகள் கொண்டவை.
தீவனம் அளிக்கும் முறை
மாடுகளுக்கு பசும்புல் மற்றும் தானிய வகை தீவனம் பயிர்களை 3 பங்கும் பயறுவகை தீவனங்களை 1 பங்கும் கொடுக்க வேண்டும். இவ்வாறு அளிக்கும்போது கால்நடைகளுக்கு புரதம் மற்றும் மாவுச் சத்துக்கள் சரியான விகிதத்தில் கிடைக்கும். இதனால் மாடுகளுக்கு பாலில் கொழுப்பு சத்து அதிகரிக்கும்.
தட்டைப்பயறு
தீவன தட்டைப்பயறு புரத சத்து அதிகமுள்ள தீவன பயிர் ஆகும் .இதையே 30 முதல் 60 நாட்களில் அறுவடை செய்யலாம் .இந்த தீவனப் பயிர்களில் இலைகள் உதிரும் அளவு மிகவும் குறைவு.
மேலும் உலர்தீவனம் தயாரிப்பதாக உகந்ததாகும். ஒரு ஏக்கருக்கு 4 கிலோ விதை போதுமானது.
கால்நடைகளுக்கு பசுந்தீவனம் அளிக்கும் முறைகள்
கறவை மாட்டிற்கு நாள் ஒன்றுக்கு 15 முதல் 25 கிலோ பசுந்தீவனம் அளி க்கலாம். அதில் மூன்றில் இரண்டு பங்கு தானியம் மற்றும் பயறு வகை பசுந்தீவனங்களை மீதமுள்ள ஒரு பங்கு பயறுவகை மற்றும் தழை இலைகள் ஆகவும் இருக்க வேண்டும்.
மேலும் பசுந்தீவனங்களை 2 அங்குல அளவிற்கு துண்டுகளாக நறுக்கி போடுவது சிறந்ததாகும். இதனால் துண்டுகளின் அளவு 2 அங்குலத்துக்கு கீழ் குறைந்தால் பாலில் கொழுப்புச்சத்து குறையும்.