கொழுக்கட்டை புல் சாகுபடி செய்து கால்நடைகளுக்கான தீவனப் பற்றாக்குறையை போக்கலாம்…

நிலம் தயாரித்தல் மண் வடிகால் வசதியுள்ள இரு மண்பாட்டு மற்றும் சுண்ணாம்புச் சத்து மிகுந்த நிலம் மிகவும் ஏற்றது. களர், உவர், நிலங்களிலும் பயிர் செய்யலாம்.

உழவு:

நிலத்தை இரும்புக்கலப்பை கொண்டு இரண்டு அல்லது மூன்று முறை உழுது பாத்திகள் அமைக்க வேண்டும்.

தொழு உரமிடுதல்:

எக்டருக்கு 5 டன் தொழு உரம் இடவும்.

உரமிடுதல்:

மண் பரிசோதனையின் படி உரமிடவும், மண் பரிசோதனை செய்யாவிடில் எக்டருக்கு 25 :40:20 கிலோ தழை, மணி , சாம்பல் சத்து இடவும்.

அடியுரம் விதைப்புக்கு முன் முழு அளவு உரத்தையும் அடியுரமாக இடவும்.

மேலுரம்:

ஒவ்வொரு அறுவடைக்குப் பின்பும் எக்டருக்கு 25 கி தழைச்சத்தை மழை வரும் போது இடவும்.

விதைப்பு விதை அளவு:

எக்டருக்கு 6-8 கிலோ (அல்லது) எக்டருக்கு 40,000 வேர்க்கரணைகள்

இடைவெளி : 50 X 30 செ.மீ. புதிய விதைகளுக்கு 6-8 மாதம் விதையுறக்கம் உண்டு. விதையுறக்கத்தை தவிர்க்க, விதைப்புக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு விதைகளை 1 சதம் பொட்டாசியம் நைட்ரேட் கரைசலில் ஊறவைக்கவும்.

களை நிர்வாகம் தேவைப்படும் போது களை எடுக்கவும்.

அறுவடை:

முதல் அறுவடை விதைத்து 70 அல்லது 75 நாட்களிலும், அடுத்தடுத்த 4-6 அறுவடைகள் வளர்ச்சியைப் பொறுத்து செய்ய வேண்டும்.

அறுவடைக்கு பதிலாக கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடலாம்.

ஊடுபயிர்:

வறட்சியை தாங்கி வளரக் கூடியது.

கொழுக்கட்டைப் புல்லை முயல் மசாலுடன் 3:1 என்ற விகிதத்தில் ஊடுபயிராக பயிரிடலாம்.

பசுந்தீவன மகசூல்:

ஆண்டிற்கு 4 முதல் 6 அறுவடைகளில் எக்டருக்கு 40 டன் பசுந்தீவன மகசூலைத் தரவல்லது.

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories