சினை ஆடுகளுக்கானத் தீவன மேலாண்மை பற்றி தகவல்!

கர்ப்ப காலம் என்பது, மனிதர்களுக்கு மட்டுமல்ல, கால்நடைகளுக்கும் கூடுதல் கவனம் செலுத்திப் பராமரிக்க வேண்டிய காலம் ஆகும்.

தீவன மேலாண்மை (Fodder management)
எனவே சினை ஆடுகளின் தீவன மேலாண்மை குறித்துப் பார்ப்போம் மற்றும்

பிரித்து வைத்தல் (Separation)
சினை உறுதி செய்யப்பட்ட ஆடுகளைத் தனியாக பிரித்து வைத்து தீவனம் அளிக்க வேண்டும்.
எனவே,
முதல் 3 மாதங்களை விட கடைசி 2 மாதங்களில் கருவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் . ஆகையால், இக்காலங்களில் வழக்கமான அளவைக் காட்டிலும் 1 – 2 மடங்கு அதிக தீவனம் அளிக்க வேண்டும் இதில்,

அவ்வாறு கூடுதல் சத்துக்களினால் குட்டிகளில் சிறந்த பிறப்பு எடை, குட்டிகளில் குறைந்த இறப்பு விகிதம், தாய் ஆடுகளில் சிறந்த பால் சுரப்பு அதன் மூலம் குட்டிகளின் வளர்ச்சி வேகம் அதிகரித்தல் போன்ற நன்மைகள் ஏற்படுகின்றன.

முதல் 3 மாதத் தீவனம் (First 3 months feed)
பசுந்தீவனம் 3 – 4 கிலோ , உலர் தீவனம் 1 கிலோ , அடர் தீவனம் 250 கிராம்.

4,5-வது மாதத் தீவனம் (4,5th month feed)
சினையின் 4 மற்றும் 5 – ம் மாதங்களில் அளவினை அதிகரித்து பசுந்தீவனம் 5 – 6 கிலோ , உலர் தீவனம் 1 கிலோ , அடர் தீவனம் 350 – 400 கிராம் அளிக்கலாம். இதனை 2 – 3 வேளைகளில் பிரித்து அளிக்க வேண்டும்.

சுத்தமான குடிநீர் மற்றும் தாது உப்புக்கள் எப்போதும் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

மகப்பேறு காலம் (Maternity period)
குட்டி ஈனும் தருவாயில் அல்லது குட்டி ஈன்ற பின் தானியங்களின் அளவை குறைத்துக் கொண்டு உலர் தீவனத்தைத் தேவையான அளவு கொடுக்கலாம்.

தாய் ஆடுகளுக்கான தீவன மேலாண்மை
குட்டி ஈன்ற உடன் நல்ல சுத்தமான, சுட வைத்து ஆர வைத்த வெதுவெதுப்பான வெந்நீர் அளிக்க வேண்டும்.

குட்டி ஈன்ற பின் மெதுவாக தீவன அளவைக்கூட்ட வேண்டும்.

ஒரு நாளைக்குத் தேவையான தீவனத்தை 6 – 7 தடவையாக பிரித்துக் கொடுக்க வேண்டும்.

எளிதில் செரிமானம் ஆகக்கூடியதாகவும், நார்ச் சத்து மிகுந்த தீவனத்தையும் அளிக்க வேண்டும்.

 

தீவனத்தை அதிகரித்தல் (Increasing fodder)
பால் உற்பத்திக்கு, கூடுதல் சத்துக்கள் தேவைப்படுவதால் பால் கொடுக்கும் 3 மாதங்களுக்கு தீவன அளவினை அதிகரிக்க வேண்டும் என்றார்.

அதாவது நாள் ஒன்றுக்கு பசுந்தீவனம் 5 – 6 கிலோ , உலர் தீவனம் 1 கிலோ , அடர் தீவனம் 400 – 500 கிராம் என்ற அளவில் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories