பசுந்தீவன சாகுபடி முறைகள்!

பசுந்தீவன பயிர்களில் புல் வகை தீவனைங்களில் கம்பு நேப்பியர் ஒட்டு புல், கொழுக்கட்டை புல் ,கினியா புல் ஆகியவற்றிற்கு குறிப்பிடலாம்.

இதில் இறவையாக கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ 3, கோ 4, கோ 5, கினியாப்புல், எருமை புல் ஆகியவற்றையும் மானாவாரியாக கொழுக்கட்டடை புல், கோ 1 ஆகியவற்றை பயிரிடலாம்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் வெளியிட்டுள்ள கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ 4 கோ 5 ரக தீவனப்பயிர்கள் அதிக விளைச்சல் தரக்கூடியது.

இவை, ஓராண்டுக்கு ஒரு ஏக்கரில் 150 டன் வரை விளைச்சல் கொடுக்கும்.

ஒரு முறை பயிர் செய்தால் 4 ஆண்டுகள் வரை தொடர்ந்து விளைச்சல் தரும்.

இதில்தூர்கள் அதிகமாகவும்,தண்டுப்பகுதி,சிறுத்தும்,இலைகள் அதிகமாகவும்,இருக்கும். மாடுகள் இவற்றை விரும்பி உண்கின்றன.

இதனை வேர்க்கரணைகள் அல்லது தண்டு கரணைகள் மூலம் பயிரிடலாம்.

கொழுக்கட்டை புல்லில் உள்ள வெள்ளை,நீலம், மற்றும் கருப்பு ஆகிய ரகங்கள் நன்கு வறட்சியை தாங்கி வளர கூடியவை. மேய்ச்சல் நிலங்களுக்கு ஏற்றவை.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories