பயறு வகையில் கூட பசுந்தீவனங்கள் இருக்கு. தெரிஞ்சுக்க இதை வாசிங்க.

1.. பசுந்தீவனத்தில் பயறு வகை:

** பசுந்தீவனத்தில் பயறு வகைகள் முக்கியமானதாகும். ஏனெனில், இந்த வகை தீவனத்தில் 3 சதம் முதல் 4 சதம் வரை புரதச் சத்தும், கால்சியமும் செறிந்துள்ளது.

** தானிய வகை பசுந்தீவனத்துடன், பயறு வகை தீவனத்தை 70:30 விகிதத்தில் கலந்து கொடுப்பது அவசியம்.

** பயறு வகையால் வேர் மூலம் மண்ணில் நைட்ரஜன் நிலைப்படுத்தப்பட்டு தழைச்சத்து வளம் அதிகரிக்கிறது.

** பயறு வகைகளில் இறவையாக வேலி மசால், முயல் மசால், தீவனத் தட்டைப் பயறு, காராமணி, துவரை பயிரிடலம். மானாவரியாக முயல் மசால், சிராட்ரோ, டெஸ்மோடியம், சென்ட்ரோ, சங்கு புஷ்பம், கொள்ளு, துவரை பயிரிடலாம்.

** குளிர்ப் பிரதேசங்களில் பெர்சீம், மொச்சை வகைகளைப் பயிரிடலாம்.

2.. கலப்பு பயிரிடுதல் முறை:

** பயறு வகை தீவனப் பயிர்களையும், தானிய வகை தீவனப் பயிர்களையும் கலப்புப் பயிராகக் கலந்து பயிரிடும்போது தனித்தனியே கிடைக்கும் மகசூலை விடவும் கூடுதலாக மகசூல் கிடைக்கும்.

** கோ 1, 2, 3 ஆகியவற்றை 3 வரிசையாகவும், வேலி மசால் ஒரு வரிசையாகவும் கலந்து பயிரிடலாம்.

** தீவனச் சோளம் 2 வரிசை, சோயா மொச்சை ஒரு வரிசையாகவும் பயிரிடலாம்.

** கொளுக்கட்டை புல் 3 வரிசை, முயல் மசால் ஒரு வரிசையாகவும் பயிரிடலாம்.

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories