மாடுகளுக்கு கொடுக்கும் கலப்பு தீவனத்தின் அளவு!

கால்நடைகளுக்கு அவற்றின் வளர்ச்சி பருவத்திற்கு ஏற்ப தீவனத்தை அளிப்பது என்பது சிறந்ததாகும். அதிலும் கலப்பு தீவனத்தை மாடுகளுக்கு தருவதில் சில அளவுகளை பின்பற்ற வேண்டும் அவை குறித்து இங்கு காணலாம்.

மாடுகளுக்கு கலப்பினத் தீவனத்தை கொடுப்பதில் சில வழிமுறைகள் உள்ளன. மாடு வேலையின்றி தனது எடையை அதே அளவில் வைத்துக் கொண்டு உடலின் பல்வேறு இயற்கையான செயல்களும் தடையின்றி நடைபெறுவதற்கு வேண்டிய சக்தியை கொடுக்க தீவன அளவை உடல்நிலை பாதுகாப்பு தீவனம் எனப்படும் 1.5 கிலோ கலப்புத் தீவனம் ஒரு நாளைக்கு ஒரு மாட்டிற்கு தனது உடல்நிலையை பாதுகாத்துக் கொள்ளத் தேவைப்படும்.

சுமார் 2.5 கிலோ தினசரி பால் கொடுக்கும் கறவை பசுக்களுக்கு பால் உற்பத்திக்கு ஏற்றவாறு அதிகப்படியான தீவனம் தேவையில்லை உடல் பாதுகாப்பிற்கு கொடுக்கப்படும் தீவனமே போதுமானது ஆகும் 2.5 கிலோ முதல் 1 கிலோ கலப்புத் தீவனம் என்ற விகிதத்தில் உடல் பாதுகாப்பிற்கு கொடுக்கப்படும் தீவனத்துடன் சேர்த்து அதிகம் கொடுக்க வேண்டும்.

சினை மாடுகளுக்கு கருவில் வளர்கின்ற கன்றின் வளர்ச்சிக்காக 7 மாத சினை முதல் முதல் பாதுகாப்பிற்காக கொடுக்கப்படும் தீவனம் கலவையுடன் 1-1.5 கிலோ தீவனம் அதிகமாக கொடுத்தல் வேண்டும்.

பால் வற்றி சினை இன்றி உள்ள பசுக்களுக்கு 1.5 கிலோ தீவனம் போதுமானதாகும். தீவனக் கலவைகள் தாது உப்பு கலவை சாதாரண சேர்ந்திடாவிடில் தினசரி அளவில் சாதாரண உப்பு 30 கிராம் மற்றும் தாது உப்பு கலவை 30 கிராம சேர்க்கப்பட வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories