மாடு மற்றும் எருமை மாடுகளுக்கான தீவன வகைகள்

தானிய வகை

தீவனச் சோளம் ,கோ1o, கோ27 , ஒட்டுப்புல்,கம்பு நேப்பியர், coe1, கோ 2,கோ-3 ,கோ 4 ,எருமை புல், கினியா புல் மற்றும் கொழுக்கட்டை புல்.

பயறு வகை

குதிரை மசால் ,கொள்ளு ,தட்டைப்பய, முயல் மசால், வேலி மசால்,

தீவன மரங்கள்

வாகை, சுபா புல் ,அகத்தி ,அரசமரம், வேப்பமரம், வாழை இலையும் கால்நடைகளுக்கான தீவனமாக கருதப்படுகிறது. வாழை இலை தண்டு மற்றும் பூ ஆகியவற்றை கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கலாம். வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பிறகு கால்நடைகளுக்கு தீவனமாக அளிப்பது நல்லது.

காலத்திற்கு ஏற்ற தீவனம்

கோடைக்காலம்
கோடைக் காலத்தில் அடர் தீவனத்தையும் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கொடுக்க வேண்டும். எனவே எரிசக்தி அதிகமுள்ள மக்காச்சோளம் போன்ற தீவனத்தினை அதிகமாக கொடுக்க வேண்டும் மர இலைகளின் புரதச்சத்து அதிகமாக இருப்பதால் மாடுகளுக்கு மர இலைகளைத் தீவனமாக கொடுக்கலாம். மழைக்காலத்தில் கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தை மாற்றான ஒரு தீவனமாக இருக்கும். ஒரு வளர்ந்த மாட்டிற்கு நாள் ஒன்றுக்கு 5 கிலோ மர இலைகளைத் தீவனமாக கொடுக்கலாம். மாடுகளின் தீவனத்தில் 30 கிராம் உப்பு சேர்க்க வேண்டும். உப்பில் சோடியம் மற்றும் குளோரைடு என்ற இரண்டு தாதுக்கள் இருக்கின்றன. கால்நடைகளுக்கு உலர் தீவனங்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுக்கவேண்டும் . உலர் தீவனத்தில் வெல்லப்பாகு மற்றும் உப்பு கரைசல் தெளிக்கலாம் .இதனால் கால்நடைகளுக்கு தீவன செரிமானத்தை அதிகரிக்க செய்யலாம்.

குளிர்காலம்

இக்காலங்களில் கால்நடைகளை அதிகமாக நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்புதல் தவிர்க்க வேண்டும். இளம் கன்றுகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் கொட்டகையில் வைத்து பராமரிப்பதன் மூலம் சுவாச உறுப்பு நோய்களை கட்டுப்படுத்தலாம். குளிர் காலங்களில் அதிக அளவு உலர் தீவனங்களை குறைந்த அளவு பசுந்தீவனங்களையும் கொடுக்க வேண்டும். அடர் தீவனத்தை தண்ணீரில் கலந்து கொடுத்தால் பல்வேறு வகையான பூச்சிகள் தீவனத்தில் உற்பத்தியாகி சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஆகவே அடர் தீவனங்களை உலர் நிலையில் கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories