கால்நடை வளர்ப்பதற்கு தீவனப் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் ஹைட்ரோபோனிக்ஸ் முறை பயன்படுத்தப்படுகிறது .வறட்சியிலும் வளர்ந்து பலன் தரும் தீவனமாக இந்த முறை பயன்படுகிறது. இதன் மூலம் தீவன தட்டுப்பாடு மற்றும் மழை இல்லாத வறட்சி இல்லாமை போன்றவை ஏற்பட வாய்ப்பில்லை. நிலம் இல்லாதவர்கள் இந்த முறையில் தீவனங்களை வளர்த்து பயன்பெறலாம் .ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் கம்பு ,சோளம் ,மக்காச்சோளம் போன்ற தீவனப் பயிர்களை வளர்க்கலாம்.
வளர்ப்பு முறை
வளர்க்கப்பட வேண்டிய பயிர்களின் விதைகளை ஒருநாள் அதாவது 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஒரு நாள் கழித்து விதைகளை எடுத்து நான்கு மணி நேரம் உலர விட வேண்டும். அதன்பிறகு ஒரு பையில் போட வேண்டும். பிறகு எட்டு நாட்களில் ஒரு அடி வளர்ந்து இருக்கும் .அதன் பிறகு அவ்வப்போது சிறிது தண்ணீர் தெளித்து வரவேண்டும். ஒரு கிலோ விதையில் இருந்து 8 கிலோ வரை தீவனத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.
பயன்கள
இந்த முறையில் வளர்த்த தீவனத்தை மாடுகளுக்கு கொடுப்பதால் அவற்றின் செரிமானத் தன்மை அதிகமாகும். மேலும் அந்த தீவனத்தில் புரதம் அதிகமாக இருப்பதால் அதிகம்பால் கரக்கும் இதனால் மாடுகளில் சினை பிடிக்கும் தன்மையும் அதிகரிக்கும்.