உப்பளஞ்சேரி மாடுகளை அறிய சில அடையாளங்கள்!

மண்ணின் வளம் தட்ப வெப்பம் அங்கு விளையும் தீவனங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இடத்திற்கு ஏற்ற நாட்டு இன மாடுகளை நம் முன்னோர் வளர்த்து வந்துள்ளனர்.

 

அந்தந்த மா டுகள் வைத்தே காங்கேயம் மணப்பாறை எனப் பெயர் அழைத்தார்.

அந்த வகையில் பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றான உப்பளஞ்சேரி மாடுகளைப் பற்றி. பார்ப்போம்

உப்பளஞ்சேரி மாடுகளின் மகத்துவத்தை அனுபவப்பூர்வமாக உணர்ந்ததால் அடுத்தடுத்த தலைமுறைக்கும் இந்த இனத்தை பாதுகாத்து கொடுக்க முடியும்.

உப்பளஞ்சேரி பகுதியில் இயற்கையாகவே உப்பளப்புல் என்கிற ஒரு வகையான புல் அதிகமாக வளர்ந்திருக்கும் இது தான் மருவி உப்பளஞ்சேரி என்று மாறிய பிறகு உப்பளஞ்சேரி என்று அழைக்கப்படுகிறது.

இந்த மாடுகளை தெற்கத்தி மாடு மோழை மாடு மொட்டை மாடு தஞ்சாவூர் மாடு எனும் பல பெயர்களால் அழைப்பர்.

நெற்றி வெள்ளை வால் வெள்ளை கால் வெள்ளை என்பது இந்த மாடுகளோட அடையாளம் எனலாம்.

அதாவது அவற்றின் நெற்றியில் வெள்ளை நிற நட்சத்திர வடிவம் இருக்கும். வாலின் நுனிப்பகுதியில் முழுவதுமாக அல்லது ஒரு பகுதி மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கும்.

மேலும் கால் குள ம்புக்கு மேலே வெள்ளை நிறத்தில் வளைய வடிவில் ஒரு அடையாளம் இருக்கும் இந்த மாட்டிற்கு குட்டையான கூர்மையான கொம்பு குட்டையாக இருந்தாலும் பலமாக இருக்கும் கால்கள் குட்டையான வால் இருக்கும்.

இந்த மாடுகளுக்கு தீவனச் செலவே கிடையாது முழுக்க முழுக்க மே ச்சல் மட்டும் இருந்தால் போதும்.

அதுவே நோய்எதிர்ப்பு சக்தி சோர்வு இல்லாத உழைப்பும்தான் இந்த மாடுகளோட சிறப்பு.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories