கால்நடைகளை இந்த முறைகள் மூலம் தேர்ந்த்டெடுத்து தெரிந்து கொண்டு பால் பண்ணை அமைக்கலாம்…

** தகுந்த கால்நடை வளர்ப்பவரிடமிருந்தோ அல்லது அருகிலுள்ள கால்நடை சந்தையிலோ கால்நடைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.

** ஆரோக்யமான மற்றும் அதிகபடியான பால் தரும் கால்நடைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

** புதிதாக இரண்டாவது / மூன்றாவது கன்றுகுட்டி ஈன்ற பசுவை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.

** வாங்குவதற்கு முன் கறவை மாட்டின் பால் வளம் மற்றும் மூன்று முறை பால் கறக்கும் திறன் உடையதா என நன்கு ஆராய்ந்தறிந்து வாங்க வேண்டும்.

** புதிதாக வாங்கிய கறவை மாட்டை அடையாளம் காண்பதற்கு தகுந்த அடையாளக் குறியிட வேண்டும்.(காது குத்தல் (அ) பச்சை குத்துதல்)

** புதிதாக வாங்கப்பட்ட கறவை மாட்டுக்கு நோய் தடுப்பு மருந்து வழங்க வேண்டும்.

** புதிதாக வாங்கப்பட்ட கறவை மாட்டை முதல் இரண்டு வாரத்திற்கு தனி கவனம் செலுத்தி பார்க்க வேண்டும். பிறகு அதை மற்ற மாடுகளுடன் ஒன்றாக சேர்க்கலாம்.

** குறைந்த பட்ச பொருளாதார வளத்திலேயே இரண்டு பால் தரும் கறவை மாடுகளை வாங்க வேண்டும்.

** வாங்கக்கூடிய இரண்டாவது கறவை மாடு / கறவை மாடு தொகுப்பு முதலில் வாங்கிய கால்நடைகளுக்கு 5-6 மாதம் கழித்து வாங்க வேண்டும்.

** பருவகாலத்திற்கேற்ப வளாப்பவரிடமிருந்து எருமை மாடுகளை ஜீலை – பிப்ரவரி மாதங்களில் வாங்க வேண்டும்

** இரண்டாவதாக வாங்கப்படும் கால்நடையானது ஏற்கனவே உள்ள கால்நடையின் பால் வளம் வற்றும் போது அல்லது குறையும் போது வாங்கினால் தொடர்ந்து பாலின் உற்பத்தி சீராக இருக்கும். மேலும் இது தொடர் வருமானத்திற்கும், பால் வற்றிய மாட்டினை பராமரிப்பதற்கும் உதவியாக இருக்கும்.

** பால் வளம் குன்றிய கால்நடையை ஆராய்ந்து அதற்கு பதிலான கால்நடையை வாங்க வேண்டும்.

** தரம் குறைந்த மாட்டை அது 6-7 முறை கன்று ஈன்ற பிறகு நீக்கி விட வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories