கால்நடை மருத்துவம் நிறுவனங்கள் 

கால்நடை மருத்துவம் நிறுவனங்கள் 

 
1. அறிமுகம்
2. படிப்புவிவரம்
3. வேலைவாய்ப்புகள்
4. படிப்பை வழங்கும் நிறுவனங்கள்
 
அறிமுகம் :
 
ஒரு கால்நடை மருத்துவர் விலங்குகளின் மருத்துவர் ஆவார். கால்நடை மருத்துவ இயல் விலங்குகளுக்கு ஏற்படும் நோய் பற்றியது. கால்நடை மருத்துவ அறிவியல் கல்வி ஒரு நடைமுறைத் தொழிற்கல்வியாகும். விலங்குகளின் ஆரோக்கியத்தையும் நலனையும் பேணுவதே கால்நடை மருத்துவரின் தலையாயக் கடமையாகும். அவர்கள் நோயைக் கண்டு அறிகின்றனர். விலங்குகளின் நோய் பரவாமல் கட்டுப்படுத்துகின்றனர். நோயுற்ற, காயம்பட்ட விலங்குகளுக்கு மருத்துவம் அளிக்கின்றனர். விலங்குகளின் நோய் மனிதர்களுக்குப் பரவாமல் தடுக்கின்றனர். தங்கள் வளர்ப்புப் பிராணிகளை எவ்வாறு தகுந்த முறையில் பராமரிக்க வேண்டும் என்று உரிமையாளர்களுக்கு ஆலோசனை தருகின்றனர். ஒவ்வொரு மிருகத்திற்கும் தனித்தனியான அணுகுமுறைகள் உண்டு.
 
விலங்குகளின் உடற்கூறியல், மருத்துவம், மற்றும் விலங்கு நோய்கள் தடுப்புமுறை ஆகியவையே இக்கல்வியில் அடங்கியுள்ள பெரும் பிரிவுகள் ஆகும். இந்தச் சிறப்புப் பிரிவின் அடிப்படைக் கொள்கைகள் மானிட மருத்துவ அறிவியல் போன்றதே. செல்லப்பிராணிகள், கால்நடைகள், காட்சியக விலங்குகள், ஆய்வகம் ஆகியவற்றில் கால்நடை மருத்துவர்கள் மருத்துவம், பராமரிப்பு, விலங்குகளைக் கையாளுதல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.
 
விலங்குகளின் மேல் பரிவும், விலங்களும் மனிதர்களைப் போன்றவையே அவை மனிதர்களை விட தாழ்ந்தவை அல்ல என்ற என்ணமுமே இத்துறையில் நுழைவதற்கான முக்கிய முன்தேவை யாகும். சிறந்த ஒரு கால்நடை மருத்துவராக இருக்க விரும்பினால் மருத்துவப் பள்ளியில் படித்த அனைத்தையும் ஒரு மருத்துவ மனைச் சூழலில் கையாளும் அறிவுத் திறன் அவசியம்.
 
படிப்புவிவரம் :
 
கால்நடை மருத்துவராகப் பணிபுரிய கால்நடை மருத்துவத்தில் இளநிலைப் பட்டம் அவசியம் (பி.வி.எஸ்.ஸி). கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடை வளர்ப்பு (பி.வி..எஸ்ஸி & ஏ.எச்) இளங்கலைப் பட்டப்படிப்பிற்கு இயற்பியல், வேதியல், உயிரியல் பாடங்களோடு +2 வகுப்பில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இவ்வைந்தாண்டு படிப்பிற்கு இந்தியக் கால்நடை மருத்துவக் கழக பரிந்துரைப்படி மாநில அளவில் கால்நடை/வேளாண் பல்கலைக்கழகங்களும், இந்திய அளவில் இந்திய வேளாண் ஆய்வுக் கழகமும் நடத்தும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
 
ஒரு கால்நடை மருத்துவராக, ஒருவர் கால்நடை மருத்துவ டாக்டர் பட்டத்தை (டி.வி.எம் அல்லது வி.எம்.டி) ஓர் அங்கீகரிக்கப்பட்டக் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இருந்து பெறவேண்டும். இளநிலைப் பட்டம் இல்லாதவர்களையும் பல கல்லூரிகள் சேர்த்துக் கொண்டாலும் பட்டம் இருப்பது உங்களுக்கு அனுமதி கிடைப்பதற்கு உதவியாக இருக்கும். இந்த நான்காண்டு படிப்பில் நுழைய அதிகமான போட்டி உள்ளது.
 
வேலைவாய்ப்புகள் :
 
கால்நடை மருத்துவ அறிவியல் ஏராளமான வகைகளில் வேலை வாய்ப்பை வழங்குகிறது. கால்நடை மருத்துவர்களின் தேவை அதிகரித்து உள்ளது. கால்நடை மருத்துவர்கள், அரசின் கால்நடை வளர்ப்புத் துறைகள், கோழிப்பண்ணைகள், மாட்டுப்பண்ணைகள், ஆடு மற்றும் முயல் பண்ணைகள், பந்தய சங்கங்கள், குதிரைப் பண்ணைகள், தனியார் மற்றும் அரசு கால்நடை மருத்துவ மனைகள் ஆகியவற்றில் வேலைகளைத் தெரிந்து கொள்ளலாம். தனியாகவும் மருத்துவத் தொழிலில் ஈடுபடலாம். பட்டப்படிப்பை முடித்த மாணவர் ஒருவர், அறுவையியல், நோயியல், மருத்துவயியல் போன்ற சிறப்புத் துறைகளில் முதுகலை அல்லது ஆய்வு படிப்பைத் தொடரலாம். இவற்றைத் தவிர, ஒரு கால்நடை மருத்துவர், பால்பண்ணைகளிலும் கோழிப்பண்ணைகளிலும் மருத்துவராகவோ அல்லது மருந்துக் குழுமங்களிலோ பணியாற்றலாம்.
 
துறையில் புதிதாக நுழைபவர்களுக்கு கல்வி புகட்டுவதற்கு நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த தொழில்வல்லுநர்களை பணியில் அமர்த்துகின்றன. மருத்துவ தொழில் மட்டுமன்றி இந்திய வேளாண் ஆய்வு கழகம் போன்ற அரசு நிறுவனங்களோடு இணைந்து ஆய்வுப் பணிகளையும் மேற்கொள்ளலாம்.
 
தொழிற்நுட்ப விற்பனை, வேளாண் வணிகம், சந்தைப்படுத்தல், செல்லப்பிராணிகள் உணவு உற்பத்தி தொழிலகங்கள், மட்டுமன்றி விலங்கு உணவு, பால், இறைச்சி உணவுகள் பதப்படுத்தும் தொழிற்சாலைகளிலும் நிர்வாகப் பொருப்பில் பணியமரலாம். கடின வேலை செய்ய தயாராக உள்ள கால்நடை மருத்துவர் அனைவருக்கும் எதிர்காலம் சிறப்பாக உள்ளது. நோயுற்ற விலங்குகளுக்கு உதவி செய்வதோடு விலங்கு ஆய்வாளர்களாகவும் பணிபுரியலாம். அறிவியல் பூர்வ ஆராய்ச்சிக்கு இது ஓர் வாய்ப்பு. பெரும்பாலான கால்நடை மருத்துவர்கள் மருத்துவ மனைகள், கோழிப்பண்ணைகள் மற்றும் பால்பண்ணைகளில் பணிபுரிகின்றனர்.
 
படிப்பை வழங்கும் நிறுவனங்கள் :
 
1. கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கறிவியல் பல்கலைக்கழகம்,
 
மாதவரம் பால்பண்ணைக் குடியிருப்பு
 
சென்னை, தமிழ்நாடு- 600051
 
தொலைபேசி: 044- 25551586/87
 
வலைத்தளம்: www.tanuvas.tn.nic.in
 
2. மேற்கு வங்க விலங்குகள் மற்றும் மீன்வள அறிவியல்கள் பல்கலைக் கழகம்
 
68, கே.பி.சாரணி,
கொல்கத்தா,
மேற்கு வங்காளம் -700037
 
தொலைபேசி: 033-25569234
 
வலைத்தளம்: www.wbuafscl.ac.in
 
3. மகாராஷ்ட்டிரா விலங்கு அறிவியல்கள் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம்
 
ஃபியூத்தாலா ஏரிச் சாலை,
நாக்பூர்,
மகாராஷ்ட்டிரம்- 440006
 
தொலைபேசி: 0712-2511273
 
வலைத்தளம்: www.mafsu.in
 
4. உ.பி.பண்டித் தீன் தயாள் உபாத்யாய கால்நடை மருத்துவப் பலகலைக்கழகம் மற்றும் கால்நடை ஆய்வு நிறுவனம்,
 
மதுரா, உத்தரப்பிரததேசம்- 281001
 
தொலைபேசி: 0565-2411178
 
வலைத்தளம்: www.upvetuniv.edu.in

 

 

 

 

 

 
5. ஸ்ரீ வெங்கடேஷ்வரா கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம்
 
நிர்வாக அலுவலகம், வட்டார நூலகக் கட்டிடம்,
 
திருப்பதி, ஆந்திரப் பிரதேசம்- 517502
 
தொலைபேசி: 0877-2248894
 
வலைத்தளம்: http://svvu.edu.in/
 
6. கர்நாடக கால்நடை மருத்துவ விலங்கு மற்றும் மீன்வள அறிவியல் பல்கலைக்கழகம்
 
நந்திநகர், கர்நாடகா- 585401
 
தொலைபேசி: 08482-245241
 
வலைத்தளம்: http://www.kvafsu.kar.nic.in/
 
7. குரு அங்கத் தேவ் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்
 
லூதியானா, பஞ்சாப் – 141004
 
தொலைபேசி: 0161-2553442/ 2553443
 
வலைத்தளம்: http://www.gadvasu.in/
 
8. ராஜஸ்தான் கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல்கள் பல்கலைக்கழகம்
 
விஜேய் பவன் அரண்மனை வளாகம்
 
தீன் தயாள் உபாத்யாய சர்க்கிள் அருகில்
 
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகச் சாலை
 
மேஜர் பூர்ண சிங் நகர், பிக்காநர்
 
ராஜஸ்தான் -334001
 
தொலைபேசி: 0151- 2543419
 
வலைத்தளம்: http://rajuvas.org/
 
ஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories