வயலில் உள்ள கரையானை எப்படி கட்டுப்படுத்தலாம்?
வயலில் உள்ள கரையான் புற்று கொத்தி அகற்றிநன்கு மக்கிய இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும்.
எடை சாகுபடி முறைகளை தொடர்ச்சியாக கையாளுவதன் மூலம் பாதிப்பை தவிர்க்கலாம்.
ஒரு ஏக்கருக்கு 80 முதல் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.
நீட்டிக்கப்பட்ட திரம கரைசலை எந்த விகிதத்தில் செடிகளுக்குத் தெளிக்கலாம்?
5 முதல் 10 லிட்டர் திரம கரைசல் 100 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு தெளிக்கலாம். இது வளர்ச்சி மற்றும் பூச்சி கட்டுப்பாட்டை ஊக்குவிக்கிறது.
ஒரு ஏக்கருக்கு 3 முதல் 6 லிட்டர் என்ற விகிதத்தில் பாசன நீரிலும் கலந்து பயன்படுத்தலாம்.
ஐப்பசி பட்டத்தில் என்னென்ன பயிர்கள் பயிரிடலாம்?
கொத்தமல்லி ,கொத்தவரை ,( வரப்பு பயிர்) முருங்கை பயிர் வகைகள் போன்றவற்றை ஐப்பசி படத்தில் பயிரிடலாம்.
மாடி தோட்டத்தில் காய்கறி சாகுபடி செடிகளுக்கு ஏன் தொழு உரத்துக்கு பதிலாக தேங்காய் நார் கழிவுகளை பயன்படுத்த வேண்டும்?
காய்கறி பயிர்களுக்கு தொழு உரத்துக்கு பதிலாக தேங்காய் நார்க்கழிவு பயன்படுத்தலாம். ஏனெனில் இதில் அங்கக கரிமச்சத்து அதிகமாக உள்ளது.
வேர்கள் திடமாக இருப்பதுடன் சுவாசம் அதிகரித்து கிளைப்புகள் அதிகமாக இருக்கும். அத்துடன் தேங்காய் நார்க்கழிவு பயன்படுத்துவதால் ஈரம் காக்கும் தன்மையும் அதிகரிக்கும்.
மேலும் வேர்ப்பகுதியில் நன்மை தரும் நுண்கிருமிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
கொட்டகை முறை ஆடு வளர்ப்பில் ஆட்டு சிறுநீரில் உள்ள சத்துக்களை வீணாக்காமல் தடுப்பதுஎப்படி? செடிகளுக்கு பயன்படுத்தலாம?
ஆ ட்டுக் கொட்டகைகள் தரைப் பகுதியில் நிலக்கடலைத் தோல் வைக்கோல் (சிறு துண்டுகளாக வெட்டியது) இலை சருகுகள், மரத்தூள், தேங்காய் நார் கழிவு போன்றவைகளை பயன்படுத்தி ஆழ்கூளம் தயாரிக்கலாம்.
இந்த இதை கொட்டகையில் அரை அடி உயரத்திற்கும் ஓர் ஆட்டிற்கு 7 கிலோ என்ற அளவில் இடவேண்டும். இதன்மூலம் ஆட்டுப்புழுக்கை யானது ஆழ்கூளத்தில் படிந்திருக்கும்.
ஆட்டு சிறுநீரானது ஆழ்கூளத்தில் உறிஞ்சப்பட்டு தழைச் சத்தை வீணாவதை தடுக்கும். ஆழ் கூளத்தில் உள்ள ஈரத் தன்மையைப் பொருத்து மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஆழ் கூள் ஆட்டு எருவை எடுத்து செடிகளுக்கு பயன்படுத்தலாம்.