சினை தருணத்தை கண்டுபிடிக்கும் முறைகள்( பகுதி 2)

 

 

காலை மற்றும் மாலை வேளையில் மாட்டின் வாலை பின்புறத்தில் என்னை போன்ற வழவழப்பான திரவம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. மாட்டின் பிறப்பு உறுப்பு தடித்து சிவந்து காணப்படுகிறத என பார்க்கவேண்டும்.

மேலும் இரண்டு அறிகுறிகள் தென்படும் பருவம் இருக்கிறதோ என்ற சந்தேகம் இருந்தாலும் உடனடியாக கால்நடை மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.

அதேபோல கன்று ஈன்ற மாட்டின் கன்று ஈன்ற நாளை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த நாளிலிருந்து இருபதாவது நாள் பருவத்திற்கு வரும். ஆனால் இதுவும் ஊமை சினை தருணமாக இருக்கும். ஆகவே பருவ அறிகுறிகள் ஏதும் வெளியே தெரியாது.

பிறகு சில மா டுகளில் மட்டும் பருவ அறிகுறிகள் தெரியும், அப்படி தெரிந்தாலும் சினை ஊசி போட வேண்டாம் மீண்டும் 40வது நாளில் பருவத்திற்கு வரும். இந்த நாளை தவறவிடாதீர்கள் .நன்கு சினை பிடிக்க கூடிய தருணம் இதுவாகும்.

இந்த முறை சி.னை பிடிக்காவிட்டாலும் மீண்டும் 60வது நாள் சினை தருணத்திற்கு வரும். அப்பொழுது சினை ஊசி போடலாம் அதாவது கன்று ஈன்றவுடன் வருகின்ற சினைப்பருவத்தில் சினை பிடிக்க கூடிய தன்மை அதிகமாக இருக்கும்.

மேலும் நாட்கள் செல்ல செல்ல சினை பிடிக்க கூடிய தன்மை குறைந்து கொண்டே போகும். ஆகவே கன்று ஈன்ற 60 நாட்களுக்குள் சினை பிடிக்க வைத்துவிட வேண்டும்.

கரு உடலுக்கு ஏற்ற காலம் எப்போது?

கறவை மாடுகளில் பருவ சுழற்சியானது பசுவில் 17 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறையும், எருமைகளில் 21 முதல் 24 நாட்களுக்கு ஒரு முறையும் ஏற்படுகிறது. சினைத் தருணம் ஆனது பசுக்களின் 12 முதல் 24 மணி நேரமாகும். எருமைகளில் 8 முதல் 18 மணி நேரம் ஆகியிருக்கும்.

கறவை மாடுகளில் காலையில் முதல் பருவ அறிகுறிகள் காட்டினால் மாலையிலும் மாலையில் முதலில் பருவ அறிகுறிகள் காட்டினால் அடுத்த நாள் காலையிலும் கருவூட்டல் செய்ய வேண்டும்.

மேலும் சில மாடுகள் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பருவ அறிகுறிகள் காட்டினால் 12 முதல் 24 மணி நேர இடைவெளியில் இரண்டு முறை கருவூட்டல் செய்வது அவசியமாகும். மாடுகளுக்கு நடுசினை தருணத்தில் கருவூட்டல் செய்தல் உகந்ததாகும்.

கறவை மாடுகளை அதிக வெப்பம் அதிக குளிர் தாக்கும் பொழுது அவற்றின் இனவிருத்தி திறன் பாதிப்படையும். முக்கியமாக கோடை காலங்களில் காலை மற்றும் மாலை வேளையில் ஊசி போடுவது சிறந்ததாகும்.

கிடாரி கன்று இனவிருத்தி செய்யும் போது அதை சினைத் தருணத்தில் வரும் வயதை கணக்கிடுவது மட்டுமல்லாது தகுந்த உடல் எடையினை அடைந்து விட்டதா என்பதை பார்க்க வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories