நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகளை பண்ணையிலுள்ள மற்ற ஆரோக்கியமான மாடுகளிடமிருந்து தனியாகப் பிரித்து பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு மாடுகளைத் தனியாகப் பிரித்து பராமரிக்கும் கொட்டகை மற்ற பண்ணை கொட்டகைகளில் இருந்து தனியாக இருக்குமாறு செய்தல் வேண்டும்.
ஆரோக்கியமான மாடுகளின் கொட்டகையிலிருந்து உயரமான இடத்தில் நோயுற்ற மாடுகளைப் பராமரிக்கும் கொட்டகை இருக்கக்கூடாது.
நோயுற்ற மாடுகளை பராமரிக்க தனியாக கொட்டகை இல்லாதபட்சத்தில் நோயுற்ற கால்நடைகளை கொட்டகையின் ஒரு மூலையில் ஆரோக்கியமான கால்நடைகளுக்கு தொலைவில் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.
நோய் நோயுற்ற கால்நடைகளைப் பராமரிக்க உபயோகப்படுத்தும், வாழைகள் மற்றும் இதர பொருட்கள் ஆரோக்கியமான கால்நடைகளைப் பராமரிக்க உபயோகப்படுத்தக் கூடாது.
நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை பராமரிப்பவர் தங்களுடைய கைகளை சுத்தமாக கழுவிய பிறகு தங்களுடைய ஆடைகளை மாற்றிக் கொண்டு ஆரோக்கியமான மாடுகளை பராமரிக்க செல்ல வேண்டும்.
நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகள் முழுவதும் குணமடைந்த பிறகு அந்தமாடுகளை ஆரோக்கியமான கொட்டகைக்கு ஓட்டிச் சென்று பார்க்கலாம்.