மல்லிகை செடி வைத்த உடன் ஊடுபயிர் என்ன பயிரிடலாம்.மரம்வகை அல்லது செடி வகை பயர் இடலாமா
கொத்தமல்லி கீரை போன்ற மூன்று மாதபயிர்கள் மற்றும் மூலிகைப் பயிர்களை சாகுபடி செய்யலாம்.
ரோஜா செடியில்இலைப்பேன் க்கு என்ன மருந்து கொடுக்கலாம்.
மாதம் ஒருமுறை வேப்பம்பட்டை கரைசல் தெளிப்பதன் மூலம் இலைபேன்கட்டுப்படுத்தலாம்.
வாரம் ஒரு முறை இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல் அல்லது கற்பூர கரைசல் தெளித்து விடுவதன் மூலம் தடுக்கலாம்.
மாடுகளின் மீது உண்ணி உள்ளது சுக்குதுளசி இரண்டும் தேய்த்தும் சரியாகவில்லை.
புகையிலை 5 அல்லது 6 செடிகளை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் தெலி ந்த பின்பும் மாட்டின் மேல் தெளிப்பதால் மாட்டின் உண்ணிகளை குறைக்கலாம். மேலும் வேப்ப எண்ணெய் சோற்று கற்றாழை மஞ்சள் சேர்த்துத் தடவி விடுவதன் மூலமுமா டுகளில் உன்னி குறைக்கலாம்.
பசு மாட்டின் எவ்வாறு முறையாவது குளிப்பாட்ட வேண்டும்
வெயில் நேரங்களில் போதுமான நீரும் தேவையான ஆட்கள் இருந்தால் கறவை மாடுகளை தினம்தோறும் குளிக்க வைப்பது அவற்றின் உடல் நலத்திற்கு சிறந்தது மற்றும் இதனால் தூய பால் உற்பத்தியும் ஏதுவாக இருக்கும் .