பண்ணைக்கொட்டகை

உற்பத்திக்கு ஏற்றவாறு பண்ணைக்கொட்டகையினை வடிவமைத்தல் :

 
1. சுற்றுப்புற சூழ்நிலைகள் கட்டுப்படுத்தப்பட்ட கொட்டகை
2. பொருட்களின் தரம்
3. பண்ணையாட்களை கட்டுப்படுத்துதல்
4. நோய்த்தடுப்பு
 
சுற்றுப்புற சூழ்நிலைகள் கட்டுப்படுத்தப்பட்ட கொட்டகை :
 
* கால்நடைகளின் மீது சுற்றுப்புற சூழ்நிலைகளின் கெடுதல் பலன்கள் ஏற்படுவதைத் தடுக்க சுற்றுப்புற சூழ்நிலைகள் கட்டுப்படுத்தப்பட்ட பண்ணைக் கொட்டகைகள் அமைப்பது தற்போது பிரபலாமாகி வருகிறது.
 
* வெப்பமான பகுதிகளில் அமைக்கப்படும் கட்டிடங்களில், கட்டிடங்கள் கட்டப் பயன்படும் பொருட்கள், கட்டிடங்கள் அமைக்கும் முறை போன்றவை கூரை, சுவர் மற்றும் சுற்றியுள்ள நிலப்பகுதி போன்றவற்றின் மூலம் வெப்பத்தை கடத்தாவண்ணம் தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
 
* வெப்பத்தை கடத்தாப் பொருட்களைப் பயன்படுத்துவதால் வெப்பம் கடத்துவது கட்டுப்படுத்தப்படுகிறது.
 
* கால்நடைகளுக்கு ஏற்ற காற்றின் வேகம், ஈரப்பதம் போன்றவை கட்டிடங்களில் பராமரிக்கப்படுகிறது.
 
* மேற்கூறிய எல்லாக் காரணிகளும், கால்நடைகளின் உற்பத்தித்திறன், கருவுறும் திறன், குட்டிகளை ஈனும் திறன் போன்றவற்றில் நன்மை தரும் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
 
 
பொருட்களின் தரம் :
 
* ஒரு குறிப்பிட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களில் பராமரிக்கப்படும் மாடுகள் மற்றும் கோழிகளிலிருந்து அதிகத் தரம் வாய்ந்த பால் மற்றும் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
 
* உதாரணமாக, இயந்திரம் மூலம் நகரும் தரைப்பகுதி அல்லது சாய்வான தரை அமைப்பு கொண்ட கோழிப்பண்ணையில் பராமரிக்கப்படும் கோழிகளிலிருந்து சான்றளிக்கப்பட்ட உயர் தர முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
 
* பார்லர் முறையில் பால் கறக்கப்படும் கறவை மாடுகளில் இருந்து பெறப்படும் பால் குறைந்த அளவு பாக்டீரியாக்கள் கொண்ட உயர்ந்த தரம் வாய்ந்ததாக இருக்கிறது.
 
பண்ணையாட்களை கட்டுப்படுத்துதல் :
 
* கால்நடைப் பண்ணைப் பராமரிப்பில், வேலையாட்களுக்கு அளிக்கப்படும் சம்பளத்திற்கு மட்டுமே அதிகம் செலவாகிறது.
 
* பண்ணைக் கட்டிடங்களை முறையாக வடிவமைப்பதால், வேலையாட்களின் வேலை செய்யும் திறன் அதிகரிக்கப்படுவதுடன், வேலையாட்களுக்கு ஆகும் செலவும் குறைகிறது. இரண்டு வரிசையில் மாடுகள் கட்டுமாறு அமைக்கப்பட்ட பண்ணைக் கட்டிடங்களில் பண்ணையாட்கள் ஒரே சமயத்தில் இரண்டு வேலைகளை செய்யலாம்.
 
* தீவனம் எடுத்துச் செல்லும் வழி, பால் கொண்டு செல்லும் வழி, முட்டை எடுத்து செல்லும் வழி, மாடுகளை எடை போடுவதற்கான தனியான மேடை போன்றவற்றை வடிவமைப்பதால் பண்ணையில் வேலையாட்களுக்கான செலவைக் குறைக்கலாம்.
 

நோய்த்தடுப்பு :
 
* பண்ணையில் கால்நடைகளைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்துதற்கு முறையான பண்ணைக் கட்டிட வடிவமைப்பு அவசியமாகும்.
 
* எளிதில் கழுவி விடும் வகையிலும், நல்ல வடிகால் வசதியுடன் அமைக்கப்பட்ட தரை, கழுவி விடும் வகையில் வடிவமைக்கப்பட்ட சுவர்கள் போன்றவை பண்ணையில் நோயினைக் கட்டுப்படுத்தும்.
 
* பண்ணைக்கு ஏற்ற பொருத்தமான வடிகால் வசதி, பண்ணையிலுள்ள கால்நடைகளின் கழிவுகளை சுகாதாரமாக அப்புறப்படுத்துதற்கு தேவைப்படுவதால், கால்நடைகளைத் தாக்கும் நோய்களை தடுக்க உதவி புரிகிறது.
 
* கால்நடைக் கொட்டகையின் தரையானது, ஈரத்தன்மையில்லாமல் அமைக்கப்படுவதால், பண்ணையின் உட்பகுதியில் அதிகப்படியான ஈரப்பதம் இல்லாமல் பராமரிக்கப்படுகிறது. இதனால் இளம் கால்நடைகளுக்கு சுவாச மண்டலக் கோளாறுகள் தடுக்கப்படுகின்றன.
 
* பண்ணைக் கட்டிடங்களின் வரையறுக்கப்பட்ட உயரம்
 
* அந்தந்தப் பகுதியில் நிலவும் தட்பவெப்பநிலைகளுக்கு ஏற்றவாறும், கூரை அமைக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு ஏற்றவாறும் பண்ணைக் கட்டிடங்களின் உயரம் வடிவமைக்கப்படவேண்டும்.
 
பண்ணைக் கட்டிடங்களின் நீளம் :
 
* பண்ணைக் கட்டிடங்களின் நீளம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம். பண்ணையில் பராமரிக்கப்பட வேண்டிய கால்நடைகளின் எண்ணிக்கையினைப் பொருத்து கட்டிடத்தின் நீளம் வேறுபடும்.
 
* பண்ணையிலுள்ள மொத்த கால்நடைகளின் எண்ணிக்கையினைப் பொருத்து பண்ணைக் கொட்டகையின் நீளம் கணக்கிடப்படுகிறது.
 
* உதாரணமாக, பண்ணையில் 15-20 கறவை மாடுகள் ஒற்றை வரிசையிலும், 20-50 மாடுகள் இரட்டை வரிசையில் கட்டி பராமரிக்கப்பட வேண்டுமென்றாலும், 50 மாடுகளுக்கு மேல் பராமரிக்கப்பட வேண்டுமென்றால் தனியாக கொட்டகை அமைக்கப்படவேண்டும்.
 
ஆதாரம் : தமிழ்நாடு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories