மதுரையில் மானிய விலையில் ஆடு, மாடு, கோழிகளை வழங்குதல்!

உசிலம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை மைய வளாகத்தில் நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத் திட்டத்தின் (Sustainable Agriculture Operational Plan) கீழ் 50 சதவீதம் முன்னேற்பு மானியத்துடன் (Subsidy) விவசாயிகளுக்கு ஆடு, மாடு, கோழி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மானியம்:
தற்போது மக்களிடையே நாட்டுக்கோழி, ஆடுகள் மற்றும் மாடுகளை வளர்க்க ஆர்வம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழக அரசும் பொதுமக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், மானிய (Subsidy) விலையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மதுரையில் உள்ள வாடிப்பட்டி மற்றும் உசிலம்பட்டியில் பொதுமக்களுக்கு மானிய விலையில் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வழங்கியுள்ளது.வேளாண்துறை!

கால்நடைகளை வழங்குதல்:
கால்நடை மருத்துவர்களின் (Veterinarians) பரிந்துரைப்படி மாடுகளை வாடிப்பட்டி சந்தையிலும், ஆடு, கோழிகளை உசிலம்பட்டி சந்தையிலும் விவசாயிகள் வாங்கினர். உதவி இயக்குநர்களான வேளாண் துறை ராமசாமி (Ramasamy), தோட்டக்கலைத்துறை தாமரைச்செல்வி (Thamaraiselvi), கால்நடை மருத்துவர்கள் மணிகண்டன், செல்வேந்திரன், ஜெயக்குமார் மற்றும் அலுவலர்கள் 98 பயனாளிகளுக்கு கால்நடைகளை (Livestock) வழங்கினர். மானிய விலையில் கால்நடைகளை வழங்கும் அரசின் திட்டம், பல இளைஞர்களை தொழில் செய்ய ஈர்க்கிறது என்றார்.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories