மாடுகளில் சினை தங்காமை பிரச்சனை- தீர்வு தரும் தாது உப்பு கலவை முறை!

மாடுகளில் சினை தங்காமைப் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டுமானால், தாது உப்பு கலவை வழங்க வேண்டும் என வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவே,

இது குறித்து, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

அம்மை நோய்க்கு தடுப்பு (Prevention of measles)
செம்மறி ஆடுகளுக்கு, அம்மை தடுப் பூசி போடுவதன் மூலம், வரும் மாதங்களில், அம்மை நோயிலிருந்து ஆடுகளை பாதுகாக்கலாம் என்றார்.

நாட்டுக்கோழிகளுக்கு ராணிக் கெட்நோய் தடுப்பூசி போடுவதன் மூலம், கோழிகளை, வெள்ளைக் கழிச்சல் நோயிலிருந்து பாதுகாக்க முடியும்.

உற்பத்தி திறன் மேம்பட (Improve productivity)
கால்நடைகளுக்கு புரதச்சத்து மிக்க அசோலாயை, தீவனத்துடன் கலந்து அளிப்பதால், தீவன செலவு குறைவதோடு, கால்நடைகளின் உற்பத்தி திறனும் மேம்படுகிறது.

மாடுகளுக்கு தினமும், 25- 30 கிராம் தாது உப்பு கலவையை அளிப்பதன் மூலம், சீரான உடல் வளர்ச்சி ஏற்படுவதுடன், இனப்பெரும் கத்துக்கு தேவையான தாது உப்பும் கிடைக்கப் பெறும்.

இதனால், களைப் பெருக்கமின்மை, சினை தங்காமை போன்ற பிரச்னைகளில் இருந்து எளிதில் குணமடையலாம். எனவே கால்நடை விவசாயிகள் இந்த நுட்பங்களைத் தெரிந்துகொண்டு, தங்கள் கால்நடைகளுக்கு தவறாது கொடுத்து, நோய்களில் இருந்து அவற்றைப் பாதுகாக்கலாம் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories