மாடுகளை மூச்சுத்திணறல் ஏற்பட்டால் என்ன செய்யலாம்?

நெற்பயிருக்கு எப்படி தழைச்சத்தை அளிக்க வேண்டும்?

நடவு வயலில் பசுந்தாள் உரப் பயிர்களான தக்கைப்பூண்டு, சணப்பை ,குறிஞ்சி, ஆகிய விதைகளை விதைத்து பிறகு 45 நாட்கள் கழித்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்யும்போது 10 டன்கள் வரை பசுந்தாள் உரங்கள் கிடைப்பதோடு 50 முதல் 80 கிலோ வரை தழைச்சத்தை கிடைக்கிறது.

கரும்புகளில் குருத்து பூச்சிகளை ஆரம்பத்திலேயே எப்படி தடுக்கலாம்?

நடவிற்கு முன்பு கரும்பு கரணை நேர்த்தி செய்ய வேண்டும்.

கரும்பின் உடைய விதைப் அருகில் துளையிட்டு அதில் வேம்பு புண்ணாக்கு, பசு நெய் போன்ற இயற்கை பொருட்களை நிரப்பி நாற்றை வளர்த்து நடவு செய்ய வேண்டும்.

இதன்மூலம் கரையான் தாக்குதல் மற்றும் குருத்துப் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது.

முந்திரி நடவு செய்து எத்தனை வருடங்களில் பலன் தரும்?

முந்திரி ஒட்டுச் செடிகள் நட்ட மூன்றாம் வருடத்தில் இருந்து மகசூல் தர ஆரம்பித்து விடும் முழுமையான மகசூல் பத்தாவது வருடம் முதல் கிடைக்கும்.

அசோஸ்பைரில்லம் இடுவதால் என்ன நன்மை? எப்படி பயன்படுத்துவது?

மண்ணின் வளம் கூடுகிறது. உரச் செலவு குறைகிறது. பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாக அமைகிறது அதிக மகசூல் கிடைக்க வழி செய்கின்றது.

ஒரு எக்டருக்கு தேவையான 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம் 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து சாகுபடி செய்வதற்கு முன்னதாக வயல் முழுவதும் சீராக தூவ வேண்டும்.

மாடுகளை மூச்சுத்திணறல் ஏற்பட்டால் என்ன செய்யலாம்?

ஓமம் 10 கிராம், வசம்பு 10 கிராம், மாவிலங்கப்பட்டை 10 எண்ணிக்கை, சுக்கு 10 கிராம்,சிற்றரத்தை 10 கிராம் ,திப்பிலி வேர் ஐந்து கிராம் ஆகியவற்றை அரைத்து அதை சிறு அளவில் உருண்டையாக்கி வெந்நீர் அல்லது குருணை கஞ்சியுடன் கலந்து கால்நடைகளுக்கு கொடுத்தால் மூச்சுத் திணறல் சரியாகும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories