மாடு சினை நிற்க இயற்கை மருத்துவத்திற்கு தேவையான பொருட்கள் வெள்ளை முள்ளங்கி, கற்றாழைத் துண்டு, முருங்கை இலை ,கருவேப்பிள்ளை, பெரண்டை, மஞ்சள் கிழங்கு.
சிகிச்சை முறை
சினை நிற்கவில்லை என்று உறுதியாகத் தெரிந்ததும் அன்றிலிருந்து சிகிச்சையை துவங்க வேண்டும். முதல் 5 நாட்களுக்கு தினமும் ஒரு வேளை முழு வெள்ளரி முள்ளங்கி வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை மற்றும் உப்பு தடவி கொடுக்க வேண்டும் .ஆறாவது நாள் முதல் நான்கு நாட்களுக்கு அதாவது ஒன்பதாவது நாள் வரை கற்றாழையை முட்களை நீக்கிவிட்டு தினமும் ஒரு வேளை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை மற்றும் உப்பு தடவி கொடுக்க வேண்டும் .அடுத்த நான்கு நாட்களுக்கு பத்தாவது நாள் முதல் 13 வது நாள் வரை நன்கு கை கழுவிய அப்போது பறித்த முருங்கை இலையை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை மற்றும் உப்பு தடவி கொடுக்க வேண்டும். அடுத்த நான்கு நாட்களுக்கு நன்கு கழுவி அப்பொழுது பரி த்த பிரண்டையை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை மற்றும் உப்பு தடவிக் கொடுக்கவும்.
இறுதியாக அடுத்த நான்கு நாட்களுக்குள் நன்கு கைகழுவி அப்பொழுது பரித்த கறி வேப்பிலையுடன் மஞ்சள் கிழங்கு ஓரிரு கிழங்கு வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை மற்றும் உப்பு தடவிக் கொடுக்கவும். மேற்சொன்ன அனைத்தையும் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே கொடுக்க வேண்டும். நேரடியாக உண்ணக் கொடுக்க வேண்டும் .கட்டாயம் மாடு சினை நிற்கும் இல்லையெனில் மேலும் ஒருமுறை இதை ஓரிரு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு தொடர வேண்டும் கட்டாயம் மலடு நீங்கிசினை நிற்கும்.