மக்காச்சோளத்தை எப்படி விதை நேர்த்தி செய்ய வேண்டும்?
விதைநேர்த்தி செய்ய வேண்டும் இயற்கை மக்காச்சோளத்தை உயிர் உரத்துடன் விதை நேர்த்தி செய்வது நடவு செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 8 கிலோ மக்காச்சோள விதை தேவைப்படும் .
விதைகளை நடவு பெய்வதற்கு ஆறிய அரிசி கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா ஆகிய இரண்டு உயிர் உரங்களையும் தலா 200 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்த பிறகு நிழலில் உலர்த்தி நடவு செய்ய வேண்டும்.
கீரை விதைகளை எப்படி விதைக்க வேண்டும்?
மிகவும் சிறிதாக இருப்பதால் சம அளவு மணலுடன் சேர்த்து பாத்திகளில் நேரடியாக தூவி மண் அல்லது மணல் கலந்து கொண்டு விதைகளை மூடிவிட வேண்டும்.
விதைத்த 10 நாட்களுக்குப் பிறகு கீரை செடிகளை 10 சென்டிமீட்டர் இடைவெளி இருக்குமாறு கலந்துவிட வேண்டும்.
எலுமிச்சை சாகுபடி பாதிப்பு ஏற்படுத்தும் பூச்சிகள் மற்றும் நோய்கள் என்ன?
எலுமிச்சை சாகுபடியில் இலை நுண் துளைப்பான் தண்டுதுளைப்பான் பழ ஈ வெள்ளை ஈ அஸ்வினி போன்ற பூச்சிகளாலும் சொறி ட்ரஸ்டிச நச்சுயிரி நோய்கள் பசை போன்ற நோய்களாலும் சேதம் ஏற்படும்.
கண்வலிக்கிழங்கு விதைப்பதற்கு எவ்வாறு தேர்வுசெய்யவும்?
கண்வலிக்கிழங்கு தைப்பதற்கு ஏக்கருக்கு 60 கிராம் எடையுள்ள 800 கிலோ கிழங்குகள் தேவைப்படும்.
கிழங்குகளை நடவு செய்யும் முன் சாணத்தில் நனைத்து நிழலில் உலர வைத்த பிறகு நடவு செய்ய வேண்டும்.
கிழங்குகளை மணலில் பதியும் வைத்திருந்து அடுத்த பருவ விதத்திற்கும் பயன்படுத்தலாம்.
மாட்டு கொட்டகையில் கொசு தொல்லையை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
இரும்பு சட்டியில் மணலைக் கொட்டி கட்டை கரி மூலம் நெருப்பு உண்டாக்கி நொச்சி பலா எருக்கு தைல மர இலை ஆடு மாடுகள் சாப்பிடாத மூலிகை இலைகளை போட்டு சாம்பிராணி கொண்டு புகைமூட்டம் உண்டாக்கலாம்.
கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை தண்ணீருடன் சேர்த்து ஸ்பிரேயலில் ஊற்றி ஸ்பிரே செய்து கொசுவை விரட்டும்.