மாரி தென்றல் அடித்தால் இதை தான் செய்ய வேண்டுமா?

“மாரி தென்றலடித்தால் மாட்டை விற்று ஆட்டை வாங்கு”

விவசாயிகளுக்கு முக்கியமான உபதொழில் என்றால் அது கால்நடைகள் வளர்ப்பது தான் .அதிலும் சில சமயங்களில் சிரமங்கள் ஏற்படுகின்றன .அந்தவகையில் வரும் சிக்கல்களை சரி செய்யவும் உதவும் கால்நடை குறித்த வேளான் பழமொழியை இங்கு காணலாம்.

அறிவழகனுக்கு விவசாயத்தில் எவ்வளவு ஆர்வம் உள்ளதோ அதே அளவு கால்நடைகளை பராமரிப்பதிலும் ஆர்வம் இருந்து வந்தது… ஒருமுறை அவரது தந்தையை அவரைப் பார்க்க வந்தார்.அவர் அனுபவமுள்ள மூத்த விவசாயி.

அவர் தனது மகனை பார்த்தவுடன் விவசாயம் எப்படி போகிறது என்று கேட்டார்.. நல்ல முறையில் போகிறது அப்பா. இருந்தாலும் மழை இல்லை என்றால் தான் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் இல்லாமல் பராமரிப்பது சற்று சிரமமாக உள்ளது என்றார்.

அதைக் கேட்ட அவரது தந்தை இதற்குதான் மாற்று வழி உள்ளதே… அதற்கு அவனது மகன் என்ன வழி அப்பா என்று கேட்டார்.

அதற்கு அவர் “மாரி தென்றலடித்தால் மாட்டை விற்று ஆட்டை வாங்கு” என்று நமது முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள் என்றார்.

ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் என்று கேட்டார் அவரது மகன்.. அதற்கு அவர் மழைக் காலத்தில் காற்று அடித்தால் மழை பெய்யும் அளவு குறைந்து விடும் .இதனால் பயிர் விளைச்சல் குறைந்து மாடுகளுக்குத் தீவனம் கிடைப்பது அரிதாகிவிடும்.

எனவே அச்சமயத்தில் மாடுகள் வளர்ப்பது சிரமமாக இருக்கும் அதனால் ஆடுகள் வாங்கி வளர்ப்பது மேலானது என்பதனை தான் நான் உனக்கு அக்கால பழமொழி வாயிலாக கூறினேன் என்று கூறினார்.

அதற்கு அவரது மகனும் நீங்கள் சொல்வதும் சரிதான் அப்பா. மழைக்காலங்களில் சரியாக தீவனம் கிடைக்காததால் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப முடிவதில்லை என்றார். இதற்கு நீங்க சொன்னது போல ஆடுகளை பராமரிப்பது எளிது. ஒரு பட்டியிலும் அ டைக்கலாம்அப்பா என்றார்.

உடனே அவரது தந்தை நாம் எதை செய்தாலும் யோசித்து செய்ய வேண்டும். போதிய அளவில் உலர்தீவனம் இருந்தால் இந்த பிரச்சனையே இருக்காது. சரியான மழை பெய்யவில்லை என்றால் பசுந்தீவனம் சரியாக கிடைப்பதில்லை. மேலும் மழை காற்று மாடுகளுக்கு ஒத்துக் கொள்வதில்லை. இதை தான் நம்முன்னோர்கள்
“மாரி தென்றலடித்தால் மாட்டை விற்று ஆட்டை வாங்கு” என்று சொன்னார்கள்.

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories