பால் உற்பத்திக்கு உதவும் சூப்பர் நேப்பியர் புல்

 

கால்நடை விவசாயிகளுக்கு பால் மாடுகள் வளர்ப்பும் மூலம் வருமானம் கிடைக்கிறது. அதிகமான பால் கறவைக்கு உதவும் சூப்பர் நேப்பியர் புல்தமிழகத்தில் அதிக அளவில் காணப்படுகிறது.

கறவை மாடுகளைப் பராமரிக்கும் போது தீவன செலவு குறைவாக இருந்தால் லாபம் அதிகரிக்கும். சூப்பர் நேப்பியர் புல் கால்நடைகளுக்கு சிறந்த பசுந்தீவனம் ஆக இருக்கிறது.

இது யானை புல் மற்றும்கம்பு ஆகியவற்றை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது. புல் வகையிலேயே அதிகமான அளவில் சும்மர் 16 முதல் 18 சதவீதம் புரதச்சத்து கொண்டது.

ஒரு அறுவடைக்கு ஏக்கருக்கு 200 டன் வரை மகசூல் கிடைக்கும். எனவே இது நேப்பியர் ஃபுல் ராஜாஎன்று அழைக்கப்படுகிறது.

இதில் நீரில் கரையும் கார்போஹைட்ரேட்டுகளும் 18 சதவீதம் வரை இருப்பதால் இதனை சைலேஜ்வடிவில் பயன்படுத்தி வரட்சிக்காலத்தில் தீவனமாக கால்நடைகளுக்கு பயன்படுத்தலாம்.

தற்போது உள்ள கோ-4 மற்றும் கோ6 ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது இதன் மகசூல்புரதச்சத்து ஆகியவை இரண்டு மடங்கு அதிகமாகும்.

நடவு முறை

சூப்பர் நேப்பியர் புள்ளை விதைக் கரணைகள் மூலம் நடவு செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 10 ஆயிரம் விதைக் கரணைகள் தேவைப்படும்.

கருணைக்கு 2அடி இடைவெளி என்ற அளவில் நடலாம் .பெரிய அளவில் நீர் பாசனம் தேவையில்லை.

60 நாட்களில் முதல் அறுவடையும் தொடர்ந்து அடுத்த 40 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.

பயன்கள்

கறவை மாடுகளுக்கு சூப்பர் நேப்பியர் புல் ளை தீவனமாக அளிப்பதன் மூலம் கெட்டியான பால் கிடைக்கும்.

ஒரு லிட்டர் பாலுக்கு 30 பைசா வரை கூடுதலாக லாபம் கிடைக்கும் என்பது கால்நடை வளர்ப்போரின் அனுபவமாகும். நேப்பியர் புள்ளை பயிரிட்டுதரமான பால் பண்ணையை நடத்தி பயன்பெற முடியும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories