வான்கோழி வளர்ப்பு

புறக்கடை வளர்ப்பு

வீட்டைச் சுற்றி 5 சென்ட் நிலம் இருந்தால் அது ஒரு ஜோடிக்கு போதுமானதாக இருக்கும் .இரவு நேரத்தில் அடைத்து வைத்திட ஒரு சிறிய அறை அல்லது பெரிய கூடைகள் தேவைப்படும். முட்டையிட ஒரு சிறிய இருட்டான இடம் தேவைப்படும்.

வீட்டு தோட்டங்களில் வான்கோழிகளை வளர்க்கலாம். வீடுகளில் இருக்கும் நெல், அரிசி ,கம்பு, சோளம், தவிடு .,எஞ்சிய சாதம், சமையல் அறைக் கழிவுகள் ஆகியவை வான்கோழிகளுக்கு உணவாக கொடுக்கலாம்.

மேய்ச்சலுடன் கொட்டகையில் வளர்ப்பு

வியாபார முறையில் வான்கோழிப் பண்ணை அமைத்திட மேய்ச்சலுடன் கொட்டகை கட்டி வளர்க்கும் முறை புறக்கடை முறையை விட சிறந்ததாகும் .ஒரு ஆண் வான்கோழிக்கு கொட்டகையில் 5 முதல் 6 சதுர அடி மற்றும் ஒரு பெட்டை வான்கோழிக்கு சுமார் 4 அடி இடவசதி தேவைப்படும். இந்த கொட்டகையில் நெல் உமி அல்லது கடலைத் தோல் போட்டு ஆழ்கூளம் அமைக்கவேண்டும் .சுமார் 100 வான்கோழிகள் கொண்ட பண்ணை அமைத்திட 20 ஆண் வான்கோழிகள் தேவை .இதற்காகச் சுமார் 20 அடி அகலம் 25 அடி நீளம் கொண்ட ஒரு கொட்டகை அமைத்துக் கொள்ள வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories