காளான் வளர்ப்பில் இருமடங்கு இலாபம்!

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு தொழில்நுட்பம் (Mushroom cultivation technology) குறித்து, மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். நெற்பயிர் விளைச்சல் முடிந்த பிறகு, கிடைக்கும் வைக்கோலை பயனுள்ள முறையில் பயன்படுத்தி, காளான் (Mushroom) வளர்ப்பில் ஈடுபடலாம். இது குறித்து தான் வேளாண் கல்லூரி மாணவர்கள், விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

காளான் வளர்ப்பில் இருமடங்கு வருவாய்:
நெற்பயிரிடும் விவசாயிகள் அறுவடைக்குப் பின்னர் மிஞ்சிய சிறிதளவு வைக்கோலை (Paddy straw) பயன்படுத்தி புரதம் மற்றும் நார்ச்சத்து கணிசமான அளவில் உள்ள சிப்பி காளான் வளர்த்து இருமடங்கு வருவாய் (Double income) பெற முடியும் என மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். வேளாண்மைக்கல்லூரி மாணவர்களான சிசின்ரவி, சுபாஷ், தமிழ்மணி, தருண், சத்ரியா வசந்தகுமார், ராஜமோகன் ஆகியோர் காளான் வளர்ப்பில் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

விழிப்புணர்வு
பொதுவாக நெல் அறுவடை (Paddy Harvest) முடிந்ததும், வைக்கோலை கால்நடைத் தீவனத்திற்காக விற்று விடுவார்கள். ஆனால், வைக்கோலை விற்காமல் காளான் வளர்ப்பிற்கு பயன்படுத்தினால் இருமடங்கு இலாபம் கிடைக்கும் என்பதை விவசாயிகள் உணர வேண்டும். அதற்கான முயற்சியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும். சரியான விழிப்புணர்வு தான் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories