சிப்பிக்காளான்க்கு எப்போதெல்லாம் தண்ணீர் தெளிக்க வேண்டும்?

சிப்பிக் காளான் வளர்ப்பில் ஒரு நாளைக்கு நான்கு முறை குளிர்ந்த நீரை காலன் பைகளில் தெளிக்க வேண்டும்.( ஸ்பிரே செய்யவும். காளான் வித்து உலர்ந்து இருக்கும் போதெல்லாம் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
பத்து நாள் முதல் 15 நாட்களுக்குள் சிப்பிக்காளான் கொத்துக்கொத்தாக வளர்ந்த நிலையில் தினசரி சிறிது தண்ணீர் தெளித்து வரவேண்டும்.

கரும்பு வயலுக்கு எப்பொழுது உரம் இடவேண்டும்?

நடவு செய்த 80 ஆம் நாளில் 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை ஒவ்வொரு கரும்பு பயிரின் வேர் பகுதியிலும் ஒரு கையளவு சரிசமமாக பகிர்ந்து வைத்து பாசனம் செய்ய வேண்டும் இதனால் கரும்பை தாக்கும் நூற்புழுக்கள் கட்டுப்படுத்தலாம்.

நடவு செய்த 90 நாட்களுக்கு பிறகு கடலை பிண்ணாக்கு 100 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கு 200 கிலோ ஆகியவற்றை கலந்து ஒவ்வொரு பயிரிலும் ஒரு கையளவு பகிர்ந்து வைத்து மண் அணைக்க வேண்டும்.

நெல் விதை நேர்த்தி எவ்வாறு செய்வது?

ஆட்டு ஊட்ட கரைசல் அல்லது பஞ்சகாவியா கலவையையும் 300 மில்லி என்ற அளவில் 10 லிட்டர் நீரில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

நெல் மற்றும் கடினமான தோலுடைய விதைகளை 24 மணி நேரம் ஊறவைத்து இவ்வாறு விதை நேர்த்தி செய்த பின் விதைக்க வேண்டும்.

முருங்கை விதை எவ்வாறு சேகரித்து வைப்பது?

முருங்கை விதை எடுக்கும்போது விதைக்கான காய்களை செடியிலேயே நன்கு முற்ற வைக்க வேண்டும் பின்பு விதைகளை நீக்கிவிட்டு நன்கு முற்றிய விதைகளை மட்டும் இரண்டு மணி நேரம் வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த விதைகளை பாலித்தீன் பைகளில் போட்டு ஒரு கிலோ விதைக்கு 15 கிராம் வசம்பு தூள் தலா 20 கிராம் நன்கு காய்ந்த நொச்சி இலை வேப்பிலை கலந்து நன்கு கிளறிவிட்டு காற்றுப் புகாதபடி கட்டி வைக்க வேண்டும் இவ்வாறு சேமித்த விதைகளை ஒரு ஆண்டு வரை வைத்திருந்து விதைப்புக்கு பயன்படுத்தலாம்.

வெள்ளாடுகளில் பேன்களை எப்படி கட்டுப்படுத்துவது?

வெள்ளாடுகளில் வாழும் பேன்கள் ஆடுகளை மட்டுமே தாக்கக் கூடியவை.
பேன்களை

பேன்களை கட்டுப்படுத்துதல் கடினம். முட்டை இட்டு 8-12நாட்கள் கழித்தே குஞ்சு பொரிப்பதால் கால்நடை மருந்தகங்களில் கிடைக்கும் பேன் கட்டுப்பாடு மருந்துகளையே முதல் முறை அடித்து பிறகு சில நாட்கள் கழித்து அடிப்பது அவசியம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories