காளான் என்பது பூஞ்சான்வகையை சேர்ந்த பச்சையம் இல்லாத தாவரம் ஆகும். கடலில் உள்ள சிற்பியின் வடிவத்தைக் இக்காளான்பெற்றுள்ளதால் சிப்பிக்காளான் என்று அழைக்கப்படுகிறது.
இவை சிறிய தண்டுப் பகுதியுடனோ அல்லது தண்டுப்பகுதி இல்லாமலோ இருக்கும். இந்த காளானின் அடிப்பகுதியில் வரிவடிவம் கொண்ட செதில் போன்ற அமைப்புகளுக்கு இடையில் லட்சக்கணக்கான நுண்வித்துகள் நிறைந்திருக்கும்.