டிச.5ம் தேதி காளான் வளர்ப்பு பற்றி பயிற்சி!

(TNAU) சார்பில் வரும் 5ம் தேதி காளான் சாகுபடி குறித்த நேரடி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் நோயியல் துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் 5ம் தேதி காளான் வளர்ப்பு குறித்தப் பயிற்சி அளிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

நேரடி பயிற்சி (Training)
கொரோனா வைரஸ் தாக்கத்தினால், காளான் வளர்ப்பு நேர்முகப்பயிற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் காளான் சாகுபடி குறித்த நேரடி பயிற்சித்திட்டத்தை டிசம்பர் 5ம் தேதி முதல் மீண்டும் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. 5ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆர்வமுள்ளவர்கள் நேரடியாக துறைக்கு வந்து பயிற்சிக் கட்டணமாக ரூ.590யை (வரி, கட்டணம் உட்பட) செலுத்தி பயிற்சிக்கு பதிவு செய்து கொண்டு, பயிற்சித்திட்டத்தில் பயனடையுங்கள்.

மேலும் விபரங்களுக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர்
பயிர் நோயியல் துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் – 641 003
தொலைபேசி – 0422 -6611336
மின்னஞ்சல் : pathology@tnau.ac.in

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories