ரகங்கள் ரகங்கள்
கோ 1 2 கோ-3 சாகுபடிக்கு ஏற்றவை.
ஏற்ற பருவம்
நீர்ப்பாசன வசதி உள்ள இடங்களில் ஜூன் ஜூலை மாதங்களில் மற்ற இடங்களில் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் சாகுபடி செய்யலாம்.
மணல்
நல்ல வடிகால் வசதி வசதி உள்ள மணல் கலந்து கலந்துள்ள செம்மண் கரிசல் மண் நிலங்களில் நன்கு வளரும் தன்மை கொண்டது. களிமண் பூமி ஏற்றதல்ல மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 6.7 வரை இருக்க வேண்டும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்றாக உழுது பயன்படுத்தி பிறகு எக்டருக்கு 25 டன் என்ற அளவில் தொழு உரம் இட்டு 60 சென்டிமீட்டர் இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும்.
விதை அளவு
ஒரு எக்டர் நடவு செய்ய 80000 தண்டுகள் தேவைப்படும்.
விதைத்தல்
இந்தியாவில்நுனி கொடைகள் மூலமும் பயிரிடப்படுகிறது. நடவு செய்யணும் நுனி கொடிகளை தேர்ந்தெடுத்து அதை 20 சென்டி மீட்டர் நீளத்துக்கு துண்டுகளாக்கி நடவு செய்ய வேண்டும்.கொடியின் மத்தியில் உள்ள பாகத்தையும் உபயோகிக்கலாம். நடுவதற்கு முன்பு தண்ணீர் கட்டி முனி கொடி துண்டுகளை 20 சென்டி மீட்டர் நீளத்திற்கு தயார்செய்து பாரின் பக்கவாட்டில் 15 முதல் 30 சென்டி மீட்டர் இடைவெளியில் வரிசையாக நடவேண்டும். மத்தியிலுள்ள கொடி துண்டுகளை உபயோகித்தால் நுனி அடி இரண்டும் வெளியே இருக்கும்படி மத்தியில் மட்டும் மண்ணில் புதைத்து நடவேண்டும்.