சொட்டுநீரில் சேப்பங்கிழங்கு சாகுபடி செய்து லாபம் பெறும் விவசாயி!

மதுரை திருமங்கலம் செட்டிகுளத்தைச் சேர்ந்த விவசாயி சூரையா, சொட்டு நீர் பாசனத்தின் (Drip Irrigation) மூலம் சேப்பங்கிழங்கு சாகுபடி செய்து லாபம் ஈட்டுகிறார். நான்கு ஏக்கரில் கோழிக்கொண்டை, தக்காளி, நிலக்கடலை மற்றும் சேப்பங்கிழங்கு சாகுபடி செய்கிறார். பிதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சொட்டுநீர் மானியம் (subsidy) பெற்றுள்ளதை விவரிக்கிறார்

சேப்பங்கிழங்கு அறுவடை
முதலில் பார் பாராக நீர் பாய்ச்சி சேப்பங்கிழங்கு அறுவடை செய்தேன். நீர் பாய்ச்சுவது பெரிய வேலையாக இருந்தது. திருமங்கலம் தோட்டக்கலை உதவி இயக்குனர் பிரபா, துணை தோட்டக்கலை அலுவலர் காசிமாயன் மூலம் பிரதமரின் நுண்ணீர் பாசனதிட்டத்தை பற்றி அறிந்து கொண்டேன்.
அவர்களை அணுகிய போது ஒன்றரை ஏக்கரில் சொட்டுநீர் பாசனம் அமைக்க வழிகாட்டினர். செலவில் ரூ.65ஆயிரத்து 400 மானியமாக கிடைத்தது. முக்கால் ஏக்கரில் சோதனை முறையில் சேப்பங்கிழங்கு விதைத்தேன். 120 மூட்டை கிழங்கு அறுவடையானது. 72 கிலோ எடையுள்ள மூட்டை விலை ரூ. 2500 வீதம் நல்ல லாபம் கிடைத்தது மற்றும்

சொட்டுநீர்
தற்போது ஒரு ஏக்கரில் 600 கிலோ சேப்பங்கிழங்கு விதைத்து சொட்டுநீர் அமைத்துள்ளேன். 25வது நாள் முளைவிட்டு வளர்ந்தது. 3 நாளைக்கு ஒருமுறை சொட்டுநீர் பாய்ச்சுகிறேன். இப்போது தேவைக்கு அதிகமாகவே தண்ணீர் இருக்கிறது.

20ம் நாளில் விதைக்கிழங்கை பாதிக்காமல் ரவுண்ட் அப் களைக்கொல்லி அடித்த பின் 4 மாதங்களாக களையே எடுக்கவில்லை. இன்னும் 45 நாட்களில் அடுத்த அறுவடைக்கு (Harvest) தயாராகி விடும். ஒரு விதையிலிருந்து ஒன்றரை கிலோ விதைக்கிழங்கு கிடைக்கும் இதில்

லாபம்
ஏக்கருக்கு ஏழரை டன் எடையுள்ள கிழங்கு கிடைக்கும். இதுவரை செய்த செலவு ரூபாய் ஒன்றரை லட்சம். மூட்டைக்கு ரூ.2500 கிடைத்தால் கூட செலவு போக ரூபாய் ஒன்றரை லட்சம் லாபம் (Profit) கிடைக்கும். சொட்டுநீர் பாய்ச்சுவதால் வேலையாட்கள் செலவும் குறைவு.

உரத்தையும் தண்ணீருடன் கலந்து கொடுப்பதால் அந்த வேலையும் மிச்சம். களைகளும் அதிகம் வளர்வதில்லை. இந்த முறை பயனுள்ளதாக இருப்பதால் கோழிக்கொண்டை செடிக்கும் நிலக்கடலை செடிக்கும் சொட்டுநீர் அமைத்துள்ளேன் என்று கூறினார்.
தொடர்புக்கு
99526 13386

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories