மரவள்ளிக்கிழங்கு எப்பொழுது அறுவடை செய்ய வேண்டும்?

 • தமிழ்நாட்டில் தென்னை சாகுபடிக்கு ஏற்ற குட்டை இரகங்கள் என்னென்ன?

  இந்திய குட்டை ரகமான கேரளாவில் தாயகமாகக் கொண்ட சாவக்காடு ஆரஞ்சு குட்டை , சாவக்காடு பச்சை குட்டை, சாவக்காடு மஞ்சள் குட்டை ரகங்களும் ஆந்திராவில் தாயகமாகக் கொண்ட கங்கா பாண்டம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மலேசியன் மஞ்சள் குட்டை முதலானவை தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

  வருடத்திற்கு ஒரு மரத்திற்கு 100 முதல் 120 காய்கள் வரை மகசூல் பெறலாம் .இந்த ரகங்களில் இளநீருக்கு மிகவும் உகந்தது.

  நெல் பயிருக்கு தழைச்சத்து அளிக்க நடவிற்கு முன்பு என்ன செய்ய வேண்டும்?

  நெல் நடவிற்கு முன்பும் நடவு வயலில் பசுந்தாள் உரப் பயிர்களான தக்கைப்பூண்டு, சணப்பை, கொழுஞ்சி, விதைகளை 20 கிலோ விதைத்த பிறகு 45 நாள் கழித்து பூக்கும் தருணத்தில் மடக்கி உழவேண்டும்.

  அவ்வாறு செய்யும்போது 10 டன்கள் வரை பசுந்தாள் உரங்கள் கிடைப்பதோடு 50 முதல் 80 கிலோ வரை தழைச்சத்து கிடைக்கிறது.

  மூடாக்கு தொழில்நுட்பத்தால் என்ன பயன்?

  பொதுவாக வயல்களில் ஈரப்பதத்தை பாதுகாக்கவும் ,மண் அரிப்பை தடுக்கவும் மண்ணின் வெப்ப நிலையை சமச்சீராக வைத்திருக்கவும் மூடாக்கு உதவுகிறது.

  முக்கியமான கலைகளைத் பெருமளவு இயற்கை முறையில் கட்டுப்படுத்துவதால் களைக்கொல்லி பயன்பாடும் தவிர்க்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசு அடைவதும் குறைகிறது.

  மரவள்ளிக்கிழங்கு எப்பொழுது அறுவடை செய்ய வேண்டும்?

  மரவள்ளிக்கிழங்கு நடவு செய்து 240 நாட்களில் அறுவடைக்கு தயாராகும்.

  மரவள்ளிக்கிழங்கு சாகுபடி இலைகள் மஞ்சள் நிறம் கலந்த பழுப்பு நிறமாகி உதிரத் தொடங்கும். மேலும் நிலத்தில் வெடிப்புகள் உண்டாகும் சமயத்தில் அறுவடை செய்ய வேண்டும்.

  ஆடுகளுக்கு செருமல் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

  ஆடுகளுக்கு செருமல்குடற்புழு இருந்தால் உண்டாகும். இதற்கு குடற்புழு நீக்கம் செய்வது நல்லது.

  ஆடுகளுக்கு இரண்டு முதல் மூன்று மாத இடைவெளியில் குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.

  ஆடுகளின் எடை தகுந்தாற்போல் குடற்புழு மருந்து அளிக்க வேண்டும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories