உயிர்ச்சத்தான விட்டமின்களும்தாது உப்புக்களும் அதிக அளவில் கீரையில் உள்ளது.
தேமல்,சொறி, சிரங்கு உள்ளவர்கள் இந்தக்கீரையை தினசரி உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால் குணமாகிவிடும்.
உடலில் விட்டமின் குறைபாட்டால் ஏற்படும் நோய்களை தடுக்கும் தன்மை கொண்டது.
இந்தக் கீரையுடன் பெருங்காயமும் வெங்காயம் சேர்த்து செய்த பொரியல் ஆனது ஜலதோஷம் ,சளி, ஜன்னி, குளிர்காய்ச்சல் ஆகியவற்றை நீக்கும்.
இக்கீரையை உணவில் சேர்த்து வர வாய்வு கோளாறுகள் வாத வலி நீங்கும்.
அரைக்கீரை விதையை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்குத் தடவி வர தலை முடி கருமையாகும் செழிப்பாகவும் வளரும்.
சிறு கீரையின் பயன்கள்
இதில் சுண்ணாம்பு சத்து இரும்பு சத்து மிக அதிக அளவில் உள்ளன 90% நார்ச்சத்து, புரதம் ,கொழுப்பு தாது உப்புச்சத்து ஆகியவையும் இதில் உள்ளன. விட்டமின் ஏ டி சி மூன்றும் இதில் சம விகிதத்தில் உள்ளது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இக்கீரையை தினமும் சாப்பிட்டால் இன்சுலின் இயல்பாக சுரக்கும்.
சிறு கீரையுடன் துவரம் பருப்பு வெங்காயம் சேர்த்து கீரையை நெய்யில் வதக்கி கடைந்து தொடர்ச்சியாக 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெறும்.
குடல், இருதயம், மூளை, ரத்தம் இவைகளுக்கு நல்ல வலிமையை தரும். அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் இருதய வியாதிகள் நீங்கும்.
சிறுகீரையை உடலுக்கு அழகையும் முகத்திற்குப் பொலிவையும் தரக்கூடியது.